பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

147


"மாற்றமே பரிணாமம். மாறுதல் ஒன்றுதான்
உலகில் மாறாதிருப்பது"
எனச் சுவைப்படச் சுட்டிக்காட்டுகிறார்.

அந்த மாற்றங்கள் எத்தகையதாக இருக்க முடியும்
என்பதை,
"வியாழனை முட்டித் துளைத்த
வால்நட்சத்திரத்தால் அங்கே தண்ணீரும்
உயிர்களும் உற்பத்தியாகலாம்”

"என்றேனும் ஒருநாள் - இந்த பூமி
என்னும் கிரகம் இடிகொண்ட முட்டையாய்ச்
சிதறுண்டு போக, இங்கிருந்து தப்பிக்க
வசதிகொண்ட மனிதர்கள் வியாழன் கிரகத்தில்
வீடு வாங்கலாம்."

"இதுவரைக்கும் பூமிக்கு வெயில் தந்த
பழைய சூரியனைப் புறந்தள்ளி விட்டு,
இன்னொரு சூரியக் குடும்பத்துக்கு
ஜீவராசிகள் இடம் பெயரலாம்."

என்றெல்லாம் உலகில் மட்டுமல்ல பிரபஞ்சம் முழுமையும் மாற்ற, திருத்தங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை அறி வியல் அனுமானமாகக் கூறுகிறார் கவியரசர். அறிவியல் புனைகதைப் படைப்பாசிரியனுக்கு இருக்க வேண்டிய அடிப்பண்பு இவ்வறிவியல் அனுமானத் திறனே என்ப தையும் சூசகமாய் வெளிப்படுத்தத் தவறவில்லை கவியரசு வைரமுத்து.

கவிதை வடிவில் அறிவியல் செய்திகளைக் கூறும் முயற்சி தமிழுக்குப் புதியதன்று. இப்போக்குச் சங்க காலத் திலேயே சிறப்பாக வளர்ந்திருந்த - வளர்க்கப்பட்டிருந்த