பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



முறையாகும். சித்த மருத்துவம் முதலாகவுள்ள அறிவியல் துறை நூல்கள் பலவும் பாடல்களாகவே புனையப்பட்டிருந் தன என்பது நாமறிந்ததே. புறநானூற்றுப் பாடலொன்று.

மண்டிணிந்த நிலமும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இயதீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத் தியற்கை

எனக் கூறுவதன் மூலம் இந்நிலவுலகமானது மண், ஆகாயம், காற்று, தீ நீர் ஆகிய ஐம்பூதங்களாலானது என்ற அடிப்படை அறிவியல் உண்மையைக் கூறித் தெளிவுப்படுத் துகிறது.

அவ்வாறே, நிலம் தோன்றிய முறையையும் அதன் பின்னர் ஏற்பட்ட விளைவுகளையும் விளக்கும் வகையில்,

'கருவளர் வானத்தி சையிற் றோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கியார் தருபு..
உள்ளீ டாகிய இருநிலத் தூழியும்'

எனக் கூறும் பரிபாடல் மூலம் வானிலிருந்து காற்றும் காற்றி லிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலைகளை கூறித் தெளிவாக்குகிறார் பழந் தமிழ்ப் புலவர்.

அதுமட்டுமா கதிரவனிலிருந்து பிரிந்து வந்த பூமிக்

கோளம் நீண்டகாலப் நெருப்புக்கோளமாகப் சுழன்று, பின்