பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

149



காலப்போக்கில் பூமி குளிர்ந்து பனிப்படலமாக மாறி பின் நெடுநாட்களுக்குப் பிறகு நிலம் தோன்றியது என்பன போன்ற அறிவியல் தகவல்களையெல்லாம் இன்றைய விஞ் ஞான உலகம் வியந்து போற்றும் வண்ணம் எடுத்துக் கூறு கின்றன.

தமிழ் மருத்துவ நூல்களில் மிக நுண்ணிய தகவல்கள் கூட இலக்கியத் தரம் குன்றாவண்ணம் புலவர்களால் பொதி யப்பட்டிருப்பது வெள்ளிடைமலை.

காலப் போக்கில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களும் மக்களின் வாழ்க்கைப் போக்குகளும் தடம் மாறலாயின. நாடு விடுதலை பெற்ற பின்னரே எல்லாத்துறைகளும் மறு மலர்ச்சியடையத் தொடங்கின. அவ்வாறே அறிவியல் செய்திகளைக் கவிதை வடிவில் வடிக்கும் போக்கும் தலை தூக்கத் தொடங்கியதெனலாம்.

உரைநடையில் அறிவியல் உண்மைகளைக் கூறும் நூல்கள் பல எழுதப்பட்டிருப்பினும், கவிதை நடையில் எழுதப்பட்ட அறிவியல் நூல் 1949ஆம் ஆண்டில் வித்துவான் ப. இராமலிங்கம் என்பவரால் "அறிவு நூல் வழிகாட்டி” என்னும் பெயரில் இயற்றப்பட்டது. இந்நூலே முதல் அறி வியல் கவிதை நூலாகும்.

இந்நூல் முழுமையும் கவிதைகளாலேயே இயற்றப் பட்டுள்ளது. இயற்கைச் சாத்திரம், இரசாயனச் சாத்திரம், 'பெளதிகச் சாத்திரம்' என்ற முப் பெரும் பிரிவுகளைக் கொண்ட இந்நூல், 172 பக்கக் கவிதைகளைக் கொண்ட தாகும். அக்கால அறிவியல் பாடத் திட்டத்திற்கிணங்க இயற்றப்பட்ட அறிவியல் கவிதைகளில் இடம் பெற்றுள்ள அறிவியல் தமிழ்க் கலைச் சொற்களுக்குரிய ஆங்கிலக் கலைச்சொற்கள் அடிக்குறிப்பாக ஆசிரியரால் கொடுக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் அறிவியல் கவிதைகளைப் படிப்