பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



போர் இடர்ப்பாடின்றி, ஐயந்திரிபர அறிவியலை அறிந்து ணர வாய்ப்பேற்பட்டதெனலாம்.

இடையறாது உடலில் ஓடிக் கொண்டிருக்கும் இரத்த வோட்டம் பற்றிக் கூறவந்த கவிஞர்,

"இரத்தம் என்றும் இடைவிடாமல் தன்
இதயத்திலிருந்து பாய்குழல் மூலமாய்
உடலின் உள்ள உறுப்புகளுக்கும்
மீண்டும் வண்ண வடிகுழாய் மூலமாய்
இருதயம் தனக்கும் இன்பமுடன் செல்லல்
இரத்த ஓட்டமாய் இயம்பலாம் நன்றே”

எனப் பாடுவதன் மூலம் எளிய சொற்களைக் கொண்டு இரத் தவோட்டம் முதலாக அனைத்து உயிரியல் தகவல்களைத் தெளிவாகக் கவிதை மூலம் உணர்த்த முடியும் என்பதை எண்பிப்பதாயுள்ளது.

சிறுநீரகம் அமைந்துள்ள பாங்கை சாதாரண உவ மான, உவமேயங்களுடன் உணர்த்த முடியும் என்பதை,

"சிறுநீர்ப் பித்தியைச் செல்லக்கேண்மின்
அவரை விதைபோல் ஆரிரு உறுப்பு
நிறம் கருஞ்சிவப்பாய் நிலவும் அவைதாம்"
என அவரை விதையைச் சான்று காட்டி தெளிவாக்குகிறார்.

'பெளதிக சாத்திரம்' பிரிவில் கப்பிகளைப் பற்றிப் பாடும்போது,

"இருசில் சுழன்று விளிம்பில் பள்ளம்
சார்ந்தசக்கரம் கப்பியாம்; இதுவே
இயக்கக் கப்பி நிலைக் கப்பியென
இருவகையாக இயம்பவும் படுமே."