பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

151



எனக் கவிதையாக இயந்திரவியலை விளக்குகிறார் கவிஞர் ப.இராமலிங்கம். காந்தத்தின் கவர்ந்திழுக்கும் இயல்புத் தன்மையை யும் துருவங்களோடு அவற்றிற்குள்ள தொடர்புகளையும், அதன் தொடர் நிகழ்வுகளையும் விவரிக்கும் போது,

'வேற்றுத் துருவம் விரைவுடன் கவரும்
ஒரே துருவம் ஒன்றைப்யொன்று விரட்டும்'

என்ற கவிதை வரிகளால் விளக்குகிறார்.

சில நூட்பமான அறிவியல் செய்திகளைக் கூட இனி மைமிகு கவிதை வரிகளாய் தந்து விடுகிறார். உரை நடை யில் புரிய வைக்கத் தடுமாறும் மிக நுட்பமான அறிவியல் செய்திகளைக்கூட அழகுதமிழ் கவிதை வரிகளால் அனாயா சமாகக் கூறிச் செல்கிறார். சான்றாக, 'புவியீர்ப்பு மையம்'() பற்றிப் பாடும்போது,

“ஒரு பொருள் அணுக்களில்
நிறையெலாம் ஒன்றாய்ச்
சேர்ந்தொரு புள்ளியின்மூல
மாய்த் தாக்கி
பொருளை பூமியை நோக்கி
இழுப்பதாய்
எண்ணும் புள்ளியே ஒண்மைய
மாமே.”

எனக் கூறுவதன் மூலம் நுட்பமான அறிவியல் செய்தியைக் கூட 'சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல்' எனும் உத்தியைக் கொண்டு திறம்பட உணர்த்த முடியும் என்பதை எண்பித் துள்ளார் ஆசிரியர்.

இதில் புவியீர்ப்பு அல்லது புவியிசை எனும் கலைச் சொற்கள் அன்றையச் சூழலில் கண்டறியப்படாததால் தன்