பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்


போக்கில் 'ஒண்மையம்' எனும் கலைச் சொல்லை உரு வாக்கித் தன் அறிவியல் கவிதை நூலில் பயன்படுத்தவும் தவறவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இவ்வாறு, அறிவியல் தொழில் நுட்பச் செய்திகளை அழகிய கவிதைகளாக, இலக்கிய நயம் தோன்றக் கூற முடியும் என்பதை நிறுவ அரை நூற்றாண்டுக்கு முன்னரே முயன்று வெற்றி பெற்றுள்ளார் புலவர் . ப. இராமலிங்கம். அவரைப் பின்பற்றி வேறு சிலரும் விஞ்ஞானத் தகவல் களைக் கவிதை வடிவில் வெளிப்படுத்த முயன்ற போதிலும் போதிய வெற்றிபெற முடியவில்லை. காலப் போக்கில் இத்தகைய அறிவியல் கவிதை முயற்சிகள் தேய்பிறையா யின.

மீண்டும் அத்தகைய முயற்சி கவியரசு வைரமுத்து வடிவில், முன்னிலும், வீறுகொண்டதாக புனைகதையோடு கூடிய அறிவியல் கவிதைகளாக "தண்ணீர் தேசம்" காவிய மாகப் பரிணமித்துள்ளது எனலாம்.

அறிவியல் தகவல்களைத் திரட்டி, அவற்றை உரையா டல்கள் மூலமோ, அல்லது சிறு சிறு சம்பவங்கள் அடிப்ப டையிலோ, சிறுகதை மூலமோ அல்லது நாடகப்பாங் கிலோ எடுத்துக் கூறும் முயற்சி நீண்ட காலமாக ஆங்கில மொழியில் இருந்து வருகிறது. அதே முறையைப் பின்பற்றி தமிழிலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. பொ. திருகூட சுந்தரம் பிள்ளையவர்கள் “தந்தையும் மகளும் "அண்ண னும் தங்கையும்" என்ற தலைப்புகளில் பல அறிவியல் செய்தி நூல்களை வெளியிட்டுள்ளார். இவையனைத்தும் கேள்வி-பதில் வடிவில் சுவையாக அமைந்தனவாகும். இத்தகைய நூல்கள் சிறுவர்க்கு மட்டுமல்லாது பெரியவர் களும் விரும்பிப் படிக்கத்தக்கனவாகும்.

ஏதேனுமொரு அறிவியல் கூறுகளை அடிப்படையாக அமைத்து, அதன் மீது சம்பவங்களைப் பின்னி, அறிவியல்