பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

153



சிறுகதைகளைப் படைக்கும் முயற்சி கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழில் இருந்து வருகிறது. இதில் முதலிடம் பெறத்தக்கவர் சுஜாதா (ரங்கராஜன்) ஆவார். அறிவியல் க ல்வி கற்ற அவர் அறிவியல் கண்ணோட்டத்தோடு புனை கதை உருவாக்குவதில் வல்லவர்; படிப்போரை எளிதாக ஈர்க்கும் வண்ணம் திறம்படக் கதை சொல்லும் உத்தி கைவரப் பெற்றவர். 'என் இனிய இயந்திரா' போன்ற அறி வியல் புனைகதைப் படைப்பிலக்கிய முயற்சியிலும் ஓரளவு வெற்றி பெற்றவர். அறிவியல் புனைகதை இலக்கிய வர லாற்றில் இவருக்கும் ஒரு சிறப்பான இடம் உண்டு.

இவரைப் போலவே அறிவியல் புனைகதை இலக் கியப் படைப்பு முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு வெற்றி பெற்று வருபவர்களுள் மாலன், சுப்ர-பாலன், அமெரிக்கத் தமிழரான திரு.பூரீதரன், டாக்டர் செம்மல் போன்றவர்கள் இத்துறையில் முயற்சி மேற்கொண்டவர்கள். இன்னும் சிலர் இத்துறையில் ஆர்வங்காட்டியபோதிலும் தங்களின் தனித்து வத்தை நிலைநாட்டும் வகையில் அறிவியல் படைப்பிலக்கி யத்தை உருவாக்கவில்லையென்றே கூற வேண்டும்.

பெரியவர்கட்கான அறிவியல் புனைகதைப் படைப்பி லக்கியத்தைக் காட்டிலும் சிறுவர்கட்கான அறிவியல் கதை இலக்கியங்களே தமிழில் அதிகம் வெளிவந்துள்ளன வென லாம். அறிவியல் தகவல் இலக்கியப் படைப்புகள் சிறு வர்க்கே அதிகம் உருவாக்கப்பட்டுள்ளன என்ற தகவல் முன்பும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கென இதுவரை வெளிவந்துள்ள சுமார் 3,000 சிறுவர் நூல்களுள் சுமார் 700 நூல்கள் அறிவியல் செய்திகளை உள்ளடக்கிய நூல்களாகும். பாட நூல் தவிர்த் துள்ள இந்நூல்களில் விண்வெளியியல், நிலவியல், உயி ரியல், உடலியல், விலங்கியல், தாவரவியல் போன்ற துறை களே அதிகம் இடம் பெற்றுள்ளன.