பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



இந்நூல்களில் அறிவியல் செய்திகளை கதைப் போக்கிலும் சம்பவ அடிப்படையிலும் உரைநடைச் சித்திர மாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இம் முயற்சியில் அரை நூற்றாண்டுக்கு முன்பே ஈடுபட்ட பெ.நா. அப்புசாமி கதைக் கான தொடக்கத்தோடு ஆரம்பித்த போதிலும் அவை அறி வியல் கதை இலக்கியங்களாக மலரவில்லை.

அறிவியல் தகவல்களை உள்ளடக்கிய பல சிறுவர் அறிவியல் நூல்களை உருவாக்கிய என்.கே. வேலன், தன் நூல்களுக்கு 'காற்றின் கதை', 'பூமியின் கதை', 'மின்சா ரத்தின் கதை' எனக் கவர்ச்சியாக 'கதை' என்ற தலைப்போடு எழுதியிருப்பினும் அவை எதுவுமே கதைப் போக்கில் அமைந்த நூல்கள் அன்று.

இதனினும் சற்று மாறுபட்ட போக்கில் சிறுவர் உள வியல் அடிப்படையில் அறிவியல் செய்திகளை 'கடலிலே மத்தாப்பு' போன்ற கவர்ச்சித் தலைப்புகளில் கதைப் .போக்கில் எழுதியவர் வைத்தண்ணா ஆவார். இவரினும் சிறப்பாக கற்பனைக் சிறப்புடன் சிறுவர் அறிவியல் படைப் புகளை உருவாக்கி உலவவிட்டவர். தி.ஜ.ரா. அவர்கள். அறி வியல் செய்திகளைச் சுவையாகச் சொல்வதில் வல்லவர். சான்றாக 'வண்ணாத்திப் பூச்சி' என்ற பெயரில் இவர் எழு திய அறிவியல் நூலில் வண்ணத்துப் பூச்சி தன் கதையைத் தானே சுவையாகச் சொல்வதுபோல் அமைத்து, படிப்போ ருக்கு ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்.

அறிவியல் செய்திகளை மையமாக வைத்து, அதைச் சுற்றிலும் கற்பனையாகச் சம்பவங்களை அமைத்து சுவை யான புனைகதை வடிவத்தில் தன் படைப்புகளை உருவாக் குவதில் வல்லவராக விளங்குபவர் 'கல்வி' கோபால கிருஷ்ணன் ஆவார். செய்தித்தாள் ஒன்றில் கத்தரித்து எடுக் கப்பட்ட ஒரு பாப்பாவின் உருவப்படம் உயிர்பெற,