பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

157


மந்திரவாதி மகேஸ்வரனின் மகன் மணி, துடிப்பு மிக்க சிறுவன். தன் தந்தையின் சொல்லைமீறி, அவருக்குத் தெரியாமல் மாயாஜால அறைக்குள் செல்கிறான். அங்கு வைக்கப்பட்டிருந்த மந்திரக் கோலின் உதவியால் எறும் பளவில் சின்னஞ்சிறு உருவைப் பெற்றவனாய், அதன் உத வியோடு பூரான், தேள், பாம்பு செல், வண்டுகள், கம்பளிப் பூச்சி, வெட்டுக்கிளி, மின்மினி, மண்புழு, நத்தை நூறு காலன் போன்ற உயிர்களை நேரடியாகச் சந்தித்து, அவற்றின் வாழ்க்கை முறைகளையும் அவைகளின் விந்தையான குணப்பண்புகளையும் சுவையாக விளக்குகிறான். இச்சின் னஞ்சிறு உயிரினங்களின் உடலமைப்பு, உணவு முறை, எதி ரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மேற் கொள்ளும் முயற்சிகளைப் பற்றியெல்லாம் சுவையாக விவ ரிக்கிறது. இறுதியில் சுவர்க்கோழியாக உருமாறிய தந்தை யை வீட்டிற்கு அழைத்து வருகிறான். இந்நூல் சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் ஆர்வத்தோடு படிக்கும் வண்ணம் சுவையான சம்பவப் பின்னலோடு உருவாக்கப் பட்ட அறிவியல் படைப்பாக அமைந்துள்ளது.

இவர் நாடகப் போக்கிலும் அறிவியல் செய்திகளைப் சொல்ல முடியும் என்பதை "பஞ்சேந்திரிய புராணம்" எனும் நூல் மூலம் முயன்றுள்ளார். மனிதனது ஐம்பொறி களாகிய கண், காது, மூக்கு, நாக்கு, தொடுவுணர்வு தரும் தோல் ஆகிய ஐந்தையும் பாத்திரங்களாக்கி அவற்றின் செயல்பாடுகளையே சம்பவங்களாக்கி மேடையில் முழங்கச் செய்துள்ளார்.

இவரது சிறுவர் அறிவியல் படைப்புகள் அனைத்தும் கதைப் போக்குடையனவாயினும் முழுமையான புனை கதைப் படைப்பிலக்கியங்கள் எனும் மகுடத்தைப் பெற முடியாமல் போய்விடுகின்றன. அறிவியல் செய்திகளை