பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

இவர், தன் அறிவியல் கதைகள் மூலம் புதியபுதிய அறிவியல் செய்திகளை உண்மைகளைப் படிப்போர்க்குத் தெளிவாக்குவதோடு, காலங்காலமாக நாம் தவறாகக் கருதிக் கொண்டிருக்கும் பல செய்திகளை, அவை தவறா னவை என்பதைக் சுட்டிக்காட்டுவதோடு, அதன் உண்மைத் தகவல் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது. சான்றாக, 'பச்சைப் புல்லாக இருந்தால் பசு விரும்பித் தின்னும் என்பது நாம் கொண்டுள்ள நம்பிக்கை. ஆனால் பசு நிறக் குருடு என்பது அறிவியல் உண்மை. "மேகத்தைக் கண்டால் மயில் ஆடும்" என்பது நம் நம்பிக்கை. உண்மையில் மயில் ஆடுவது பெண் மயிலை ஈர்க்க. ஆனால் மேகம் இல்லாத போதும் ஆடும் என்பது உயிரியல் உண்மை. கூவுவது பெண்குயில் என்பது நம் நம்பிக்கை. ஆனால் கூவுவது பெண் குயில் அல்ல; ஆண்குயிலே என்பது அறிவியல் தரும் உயிரியல் உண்மை. இவ்வாறு பல உயிரினங்களைப் பற்றி அவற்றின் செயல்பாடு பற்றிய தவறான எண்ணங்கள் நம்பிக்கையைப் போக்கி சரியான தகவல்களை, அறிவியல் உண்மைகளை கதைப்போக்கில் வெளிப்படுத்துவதில் ரேவதி தனி வழிகண்டு திறம்படத் தன் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

'கல்வி' கோபாலகிருஷ்ணனும் ரேவதியும் கதைப் போக்கிலான அறிவியல் படைப்புகளை தகவல் களஞ்சிய மாகச் சிறுவர்களுக்கு படைத்தளித்துள்ள நிலையில் மற் றொரு சிறுவர் படைப்பிலக்கிய ஆசிரியரான டாக்டர் மலை யமான் அவர்கள், இதுவரை கண்டறியப்பட்டுள்ள அறி வியல் தகவல்களைக் கருவாக அமைத்துச் சிறுகதைகளைப் படைத்தளித்துள்ளார். இவ்வறிவியல் சிறுகதைகள் புனைக தைகளாகவே உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தாகும். இவரது கதைகளில் பெரும்பாலும் ஆட்சி செலுத்து வது விண்வெளிப் பயணங்களே யாகும். 'அறிவியல் சிறு