பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

161



கதைகள்' என்ற தலைப்பில் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் முப்பத்தியேழு சிறுகதைகள் உள்ளன.

{{ }}அறிவியல் புனைகதைகளுக்கு அடித்தளப் பண்பாக இருக்க வேண்டிய, அறிவியல் அடிப்படையிலான அனுமானம் இவரது படைப்புகளில் இழையோடிக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக, "கி.பி. 2087" என்ற கதையைக் கூறலாம். இருபத்தியொராம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் விஞ்ஞானம் நம் வாழ்வில் எத்தகைய விந்தைகளை உருவாக்கக் கூடும் என்பதைக் கற்பனையாகப் படைத்துக் காட்ட முற்பட்டுள்ளார்.

{{ }}கி.பி.2087 இல் வீட்டின் பூட்டைத் திறக்க திறவுகோல் தனியே தேவை இல்லை. காந்தக் கம்பிமுனையே போதும். வீட்டிற்குள் புகும் திருடர்களைப் பிடித்துத் தூணில் கட்டி வைக்கத் தேவையில்லை. அவர்கள் திருட பீரோவைத் தொட்டாலே போதும், அதிலிருந்து வெளிக் கிளம்பும் கண்ணுக்குப் புலனாகாத மின்வட்டத்திற்குள் சிக்க வைக்க முடியும். காவல் துறைக்கு தொலைபேசிமூலம் தகவல் தரவோ அவர்களிடம் நேரில் சென்று புகார் அளிக்கவோ அவசியமில்லை, கையடக்கமான கருவியில் சில எண்களை அழுத்தினாலே போதும், காவல்துறைத் தலைவர் கருவியில் தோன்ற அவரோடு நேருக்கு நேராகவே பேசி விஷயத்தை விளக்கலாம். சமைக்கவோ பரிமாறவோ ஆட்கள் தேவையில்லை. அவற்றையெல்லாம் எந்திர மனிதர்களே கவனித்துக் கொள்வார்கள். அப்படி பரிமாறப்படும் உணவும் உயர்ச்சத்துக்கள் அனைத்தும் அடங்கியவையாக மிகச் சிறிதளவே இருக்கும். மன நிலையில் மாற்றம் காண அதற்கான மாத்திரைகளை விழுங்க வேண்டும். கட்டைவிரல் சிறுத்து விட்டால் கவலை வேண்டாம். மருத்துவரிடம் கூறி சிறுத்த