பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

விரலைக் கழற்றிவிட்டு சரியான அளவில் வேறு விரல் மாட்டிக் கொள்ளலாம். நமக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டுமோ விளையாட்டு வீரனாகவோ இசைத் திறமை அல்லது வேறு திறமையாளனாகவோ இருக்க வேண்டுமென விரும்பினால் அதற்கான மாத்திரையை உட்கொண்டு, அத்தகைய குழந்தையையே பெற்றுக்கொள்ளலாம். இதைத் தேர்ந்தெடுப்பதில் ஏதெனும் சிக்கலேற்பட்டால் வேற்று கிரகங்களில் வாழும் மாமன் போன்ற உறவினர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்கலாம், விரும்பிய போது பொழுதுபோக்க வேற்று கிரகங்களுக்குச் சென்று வரலாம். அன்றைக்கு ரேடார் கண்கள் கொண்ட கார்கள் கணினி அணுசக்திமுலம் ஒடும், இருபதாம் நூற்றாண்டில் கார்களை ஒட்டப் பயன்பட்ட பெட்ரோல் டீசல், சூரியக் கதிர் ஆற்றல் போன்றவையெல்லாம் பழஞ் செய்திகளாக அன்று கருதப்படும். அரசியல் மேடைக்கு முன்னால் இருக் கைகள் போடப்பட்டு அவற்றில் இணைக்கப்பட்டுள்ள காதொலிக் கருவிகளை காதில் பொருத்தி அரசியல் பேச்சைக் கேட்கலாம். கூட்டம் நடக்கும் இடத்தில் தேவைக்கேற்ப குறிப்பிட்ட நேரத்தில் மழை பெய்விக்கலாம். இருக்கையிலுள்ள கண்ணாடியில் பேசுபவரின் உருவத்தைப் பார்க்கலாம். அனைத்துலகக் குடியரசு, அனைத்து மண்டலக் குடியரசாக மாற்றப்படும்' என்ற தலைவரின் அறிவிப்பை எதிர்ப்பவர்கள் வியாழன் மண்டலத்திலிருந்து வருவார்கள். எதிரிகள் நினைத்தால் நிலநடுக்கத்தை உண்டாக்க முடியும் என்பன போன்ற கற்பனைக் காட்சிகளைத் திறம் பட அமைத்துத் தன் சிறுகதையைப் பின்னியுள்ளார் டாக்டர் மலையமான் அவர்கள்.

{{ }}தான் கூறுவது அனைத்தும் அறிவியல் அடிப்படையிலான அனுமானம், கற்பனைகளே என்பதைப் படிக்கும் வாசகர்களுக்கு உணர்த்தும் வகையில், கதையின் இறுதியில்