பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
166

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



நோக்கம் என்பதை கவனத்தில் கொண்டு இப்புதினத்தை உருவாக்கியுள்ளார்.

குழந்தைக் கவிஞர் வள்ளியப்பாவும், நாற்பதாண்டுகளுக்கு மேலாகக் குழந்தை இலக்கியம் படைத்து வரும் டாக்டர் பூவண்ணன் அவர்களும் இத்துறையில் முன்முயற்சி மேற்கொண்ட குழந்தை எழுத்தாளர்களாவர். நாற்பதாண்டு கட்கு முன்பே தூக்கத்தில் நடக்கும் நோயை அடிங்டையாக வைத்து, "சோம்னாபுலிஸம்" என்ற தலைப்பில் கதை வடித்தவர் டாக்டர் பூவண்ணன். தொடர்ந்து அறிவியல் புனைகதைப் படைப்பில் பேரார்வம் காட்டாவிட்டாலும் அவரது படைப்புகளில் சில அறிவியல் அறிவையும் உணர்வையும் வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளனவெனலாம். சோலையன், ஜெயசீலன் போன்றோர் சிறுவர்க்கான அறிவியல் புனைகதை படைப்பதில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களாவர். டாக்டர் பூரீதரன் 'கோகுலம் இதழ் மூலம் சிறுவர் அறிவியல் புனைகதை படைப்பதில் முனைப்புக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சுருங்கக்கூற வேண்டுமனில் அறிவியல் புனைகதை இலக்கியம் உருவாக்க விழைவோர் ஒரு முக்கிய அம்சத்தை நெஞ்சத்திலிருத்திக் கொண்டு செயல்பட வேண்டும். அது இது தான், இன்று நாம் அறிகின்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் கடந்த கால ஆய்வு முயற்சியின் விளைவாக உருவானவைகளாகும். இதே கண்டுபிடிப்பு தொடர் ஆய்வு முயற்சியின் விளைவாக நாளை எம் முறையில் அமையலாம் என்ற அனுமானம் படைப்பாளியின் உள்ளத்தில் அசைபோடப்பட வேண்டும். இந்த அனுமானம் படைப்பாளரின் அறிவுத்திறன், கற்பனை வளத்திற்கேற்ப வடிவு பெறும். இவ்வாறு உருவாகும் அறிவியல் புனைகதைக்கான அறிவியல் அடிப்படையும் அவை சித்தரிக்கப்படும் முறையும்