பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

செய்தியின் அடிப்படையிலான அறிவியல்புனைகதைசுவையாகப் பின்னப்பட்டுள்ளதை அலசி ஆராய்வோம்.

முதலில்'ஆஸ்ட்ராய்டு'எனும் விண்கற்களைப் பற்றிய அறிவியல் செய்திகளையெல்லாம் கீழ்க்கண்டவாறு திரட்டித் தொகுத்துக் கொண்டுள்ளார். இவ்வாறுதொகுப்பதன்மூலம்தான் கதையின் அடிப்படைக் கருத்து, அறிவியல் உண்மைகளுக்கு மாறுபடாமல்சரியானகோணத்தில் அமையும் வகையில்கதைபுனைய முடியும்.

விண்ணில் செவ்வாய்க் கோளுக்கும்வியாழன்கோளுக்கும் இடையே ஒரு வளையம் போல் ஆஸ்ட்ராய்டுகள் எனப்படும் சின்னஞ் சிறுகோள்கள் சுழன்றோடிக் கொண்டேசூரியனை வலம்வந்து கொண்டிருக்கின்றன. இக்குறுங்கோள்களில்சிலவற்றின் குறுக்களவு பன்னூறு கிலோ மீட்டர்கள்இருக்கும்.சிலஇமயமலை அளவு இருக்கும்.ஒரு சில சிறியவையாக பாறாங்கல் வடிவில் இருக்கும்.

இவைவட்டவடிவில் வளையமாகச் சுழன்று கொண்டேசூரியனையும், சுற்றி வரும்போது,தங்கள் சுற்றுப் பாதையிலிருந்து விலக நேரும். அப்போது, மற்ற குறுங்கோளான பாறைகளுடன் மோத நேர்வதும் உண்டு. இவ்வாறு சிதறிவிழும் பாறைப் பகுதிகள் பூமியாலோ அல்லது நிலவு, சனிக்கோள்கள் போன்ற பிற கோள்களாலோ ஈர்க்கப்படுவ துண்டு. அவ்வாறு ஈர்க்கப்படும் சிதறிய விண்கற் பாறைகள் எந்தக் கோளில் போய் விழுகின்றனவோ அங்கே பெரும் பள்ளங்களை ஏற்படுத்திப் பலவித பாதிப்புகளை உண்டாக்கிவிடும். நிலவில் காணப்படும் பல்வேறு வகையான பள்ளங்களுக்கு இவ் விண்வீழ் கற்பாறைகளே காரணமாகும். அண்மையில் கூட, இத்தகைய ஆஸ்ட்ராய்டு