பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

நேரத்தில்அதனை வெளிப்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஐயம் படிப்போர்க்கும் எழுகின்ற சூழ்நிலையில் இதற்கான காரணத்தை முன்பகுதிக் கதை யாகக் கூறி விளக்குகிறார் ஆசிரியர்.

2004ஆம்ஆண்டில் உலக நாடுகள் பல தொகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வொரு தொகுதி நாடுகளும் ஏதாவதுஒரு குறிப்பிட்ட நாட்டின் தலைமையில் அறிவியல் துறை ஆய்வை முனைப்புடன் நிகழ்த்தி, அதன் முடிவுகளை மற்ற நாடு களுக்கு வழங்க வேண்டும். இது பொதுவிதி.அப்படி சாக் நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட அறிவியல் ஆய்வுத் துறை, வான்கோள் ஆய்வாகும். அவ்வாராய்ச்சியில் ஒரு மாபெரும் 'ஆஸ்ட்ராய்டு'தான் சுழலும் சுற்று வளையத்திலிருந்து விடுபட்டு பூமியை நோக்கி வீழும் என்ப தாகும். அதிலும் அஃது அண்டை நாடான பரத் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள கடலில் வீழும் என்பது, சாக் நாடு தன் வானாரய்ச்சியில் கண்டுபிடித்த உண்மையாகும், சாக் நாட்டைவிட பரத்நாடு நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.அவ்வளர்ச்சிக்குக் காரணமான தொழிற்சாலைகளும் ஆய்வுமையங்களும் அந்நாட்டின் மேற்குக் கடற்கரைப்பகுதியிலேயே அமைந்துள்ளன. பூமி நோக்கி வரும் விண்கல் இப்பகுதிக்கு அடுத்துள்ள கடலிலேயே விழும் என்பது இப்போது கண்டறியப் பட்டுள்ள கண்டுபிடிப்பின் மூலம் பெற்றுள்ள கணிப்பு முடிவாகும்.

சாக் நாட்டுத் தலைமை பரத் நாட்டுடன் கொண்டுள்ள பொறாமையின் காரணமாக விண்கல்வீழவிருக்கும் விஞ்ஞான கண்டுபிடிப்பு உண்மையைச் சொல்லாமல் மூடி மறைப்பதோடு அறிவியல் பூர்வமாக ஏதாவது செய்து கடல் பகுதியிலே விழ வைத்தால் என்ன? என்ற ஆராய்ச்சியிலும் ஈடுபட முனை கிறது. இதற்காக அத்துறைத் தொடர்புடைய