பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா 171

ஆராய்ச்சியில் மும்முரமாக இருக்கிறார்கள் என்பதை வாசகர்கள் எளிதாக உணரும் வகையில் அங்குள்ள மர்மச்சூழ் நிலை பற்றிய வர்ணனைமூலம் நமக்கு உணர்த்த முயல்கிறார். ஆசிரியர். தொடர்ந்து அங்குள்ள சூழலின் மர்மமுடிச்சைஅவிழ்க்கும் முறையில்,

“அங்கு ஆழத் தோண்டிப் பள்ளமாக்கப்பட்டிருந்த பகுதி ஏதோவொன்றால்மூடப்பட்டிருப்பது போல் தோன்றியது. திடீரென அதில் அசைவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பூமி இரண்டாகப் பிளந்ததுபோல் அதன் மேல்வாய் இரு கூறாகப்பிளக்கஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குள் மேல் மூடிய பகுதி இரு கூறாகி நகர்ந்து பக்கத்துக்கு ஒன்றாகப் பக்க வாட்டிற்குள் சென்று ஒடுங்கி மறைந்தது. அதே சமயத்தில் அடிப்பகுதியிலிருந்து அசோக மன்னன் எழுப்பிய உருக்குத் தூண் போன்று,கருநீலநிறத்தில், உருளை வடிவான ஏதோ ஒன்று மேலேழுந்துசெங்குத்தாகநின்றது. ஏவுகணைபோல் காணப்பட்ட அஃது சுமார் மூன்று மாடிக் கட்டிட உயரமிருக்கும். சாதாரண ஏவுகணையில் அமைந்திருப்பது போல் பல அடுக்குகளையும் கொண்டிருந்தது.சீவிய பென்சிலின் முனைப் பகுதிபோல் அதன்உச்சிஒடுங்கி நீண்டிருந்தது. அதன் வாய் பீரங்கியின் தலைப் பகுதியை நினைவூட்டியது.

"விண்ணை நோக்கிப் பாயும் ராக்கெட்போல் தோன்றினாலும் இஃது அதிலிருந்து சற்று வேறு பட்டது என்பதை அதன்தோற்றமும் அமைப்பும் பறைசாற்றிக் கொண்டிருந்தது"

என்ற வர்ணணை புதுமாதிரியாக வடிவமைக்கப்பட்ட இவ்வளவு பெரிய அணுவிசை ஏவுகணை வழக்கத்திற்கு மாறாக ஏன் மலைகளுக்கிடையே பூமிக்கடியில் மறைவாக வைக்கப்பட்டிருக்க வேண்டும்? அதிலும் அந்தி மயக்கும்