பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடல் அலைகளால் கரையோர நாடுகளெல்லாம் பாதிப்படையும். கடற்கரைப்பகுதிகளில் விழுந்தால் மனிதஉயிர்களும் உடைமைகளும் பெரிய அளவில் அழிவது உறுதி. எனவே விண்கல் பூமியை விட்டு முன்னதாக வானிலேயே வைத்து தகர்க்கப்பட வேண்டும் என்ற கோணத்தில் முனைப்புடன் ஆலோசிக்கப்படுகிறது.இதன் மூலம் எவ்வகையான வெடிப் பொருள் மூலம் அவ்வளவு பெரிய விண்கல்லைவானிலேயேஉடைக்க முடியும் என்பதைஆராயஅறிவியல் ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் ஆலோசனை மூலம் இன்றைய அறிவியல் வளர்ச்சியால் விளைந் துள்ள அணுவிசை வெடிகுண்டு முதலாக வெடிக்கருவிகளின் தன்மை பற்றியெல்லாம் விலா வாரியாக விவாதிக்கப்படுவதன் மூலம்‌ இன்றுள்ள வெடிப் பொருட்களின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை வாசகர்கள் அறிந்து ணர வாய்ப்பேற்படுகிறது.

இறுதியில், விண்ணலிருந்து விரைந்துவரும் விண்கல் ஒரு பெரும் மலையளவு இருப்பதால், காற்று மண்டலக் கடும் உராய்வி னால் ஏற்படும் வெப்பத்தால் அது பெரும் பாதிப்படையப் போவதில்லை. அதனால் அஃது எங்கு விழுந்தாலும் பெரும் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததால், அவ்விண்கல் எங்குமே விழாமல் வானிலேயே வைத்துஅணுவிசைஏவுகணையை மாபெரும் வெடிகுண்டுகளோடு விண்ணிலேயே மோதல் செய்து தகர்க்க வேண்டு மெனத் திட்டம் தீட்டப்படுகிறது.அதனைஇரகசியமாக, மக்களிடையே பீதி ஏற்படாமல் தடுக்கும் வகையில் செயற்படவும் தீர்மானிக்கப் படுகிறது.இம்முடிவின்விளைவால் மலைகளிடையேயுள்ள பள்ளத் தாக்கில் உருவாக்கப்பட்டுள்ள அணுவிசை ஏவுகணையாகிய ராக்கெட் இன்னும் சில நாட்களில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான இறுதிச்