பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா 173

அறிவியல் ஆய்வாளர்களின் ஆலோசனையும் நடைபெறு கிறது.

இதற்காகப் பல்வேறு வழிமுறை களைப்பற்றி கூட்டம்ஆராய்கிறது. விஞ்ஞானிகளின் ஆலோசனை வழியே பூமியின் சுழற்சியை திடீர் என அதிகப்படுத்துவதன் மூலம் சிறு மாற்றம் காண முடியுமா? ஒரே சமயத்தில் பூமிக் கடியில் பல அணுகுண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலம் பூமியின் சுழற்சி வேகத்தைக் குறைக்க முடியுமா?'பூமி சுழற்சி' போன்ற இயற்கை விதிகளையும் நியதிகளையும் மனித முயற்சி களால் மாற்ற முடியுமா? என்பன போன்ற பல விஷயங்களை விஞ்ஞானிகளைக் கொண்டே அறிவியல் பூர்வமாக ஆய்ந்து கூறச் செய்வதன் மூலம் சிறப்பாக விளக்குகிறார். இதன் வழியாக இயற்கை சக்திக்கும் மனித ஆற்றலுக்குமுள்ள வேறுபாடுகளை அறிவுபூர்வமாக ஆய்ந்து தெளிய வாசகர்களுக்கு வாய்ப்பேற்படுகிறது.

கலந்துரையாடலில் பங்கு கொண்ட சாக் நாட்டு அறிவியல் ஆய்வாளர்களிடையே மனச்சாட்சியுள்ள அபு எனும் ஒரு விஞ்ஞானியும் இருக்கிறார். பரத், நாட்டுக்கு விண் கல்லால் உயிர்களுக்கும்உடைமைகளுக்கும் விளையப் போகும் பெரும் தீங்கை தனது சாக் நாட்டுக்குத் தெரியாமல் பரத நாட்டிற்கு ரகசியமாய் தெரிவிக்கிறார். இச்சமயத்தில் வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில், உலக உயிர்க்குல நன்மையொன்றையே கருதி விஞ்ஞானிகள் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்த விழைகிறார் ஆசிரியர். செய்தியைப் பெற்ற பரத் நாடு உண்மையை உணர்கிறது. விண்கள் வீழ்வால் விளையப் போகும் பேரிடரிலிருந்து மனுக் குலத்தைக் காக்கும் முயற்சிகளில் அந்நாடு முனைந்து ஈடுபடுகிறது.

விண்கல் கடலில் வீழ்ந்தால் அப்பகுதி கடல்வாழ் உயிரினங்க ளெல்லாம் அழிய நேரலாம். அப்போது எழும்