பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

விரைந்து வரும் விண்கல்லை விண்ணிலேயே தகர்க்க. அணுவிசை ஏவுகணை மூலம் பேராற்றல் வாய்க்கப் பெற்ற பெருங்குண்டுகளை வைத்து அனுப்பும் பணி அப்துல் சலாம் என்ற இளம் விஞ்ஞானியிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஏனெனில் அணுவிசை ஏவுகணைகளையும் பேராற்றல் மிகு அணுமின் குண்டையும் கண்டுபிடித்தவர் அவரே ஆவார். இதை அவரைக் கொண்டே விளக்கிச் சொல்லச் செய்கிறார் ஆசிரியர்.

"கடந்த சில ஆண்டுகளாகவே நான் மிகக் கடினமான ஒரு ஆராய்ச்சியை ரகசியமாகச்செய்து வருகிறேன். அணு சக்தியால் இயங்கும் ராக்கெட் என்ஜினே அது. அந்த ஆராய்ச்சியும் தற்போது முடிவடையும் கட்டத்தில் உள்ளது. இதைத் தற்போதுள்ள சிக்கலான நேரத்தில் பயன்படுத்த விழைகிறேன். இந்த அணு சக்தியோடு கூடிய ராக்கெட்மூலம் வானிலேயே விண்கல்லைத் தகர்த்து தவிடு பொடியாக்கிட முடியும்.அவ்வெரிகல்துண்டுகளும் காற்று மண்டலத்தில் வரும்போது எரிந்து சாம்பலாகிவிடும். மனித குலத்தை எதிர்நோக்கியுள்ள மாபெரும் ஆபத்தும் ஆதவனைக் கண்ட பணிபோல் நீங்கி விடும்” என அப்தும் சலாமைக் கொண்டு கூறச் செய்வதன் வாயிலாக அனுப்பப் படும் அணுவிசை ராக்கெட் மற்றும் அணுமின் வெடிகுண்டுகளின்தன்மைகளைப் பற்றியெல்லாம் வாசகர்கள் நன் குணரச் செய்கிறார் ஆசிரியர்.

இதற்கிடையே சாக் நாட்டு அரசு பரத் நாட்டிலுள்ள தன் ஒற்றர்கள் மூலம் பரத் நாட்டின் அணுவிசை ஏவுகணைத்திட்டங்களையெல்லாம் அறிந்து கொள்கிறது. பரத் நாட்டின் விண்கல்லை விண்ணில் வெடிவைத்துத் தகர்க்கும் திட்டத்தைத் தோல்வி யடையச் செய்ய மோதி என்பவரைஅனுப்பு கிறது. இவர் ஒரு காலத்தில் பரத் நாட்டின் குடிமக