பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா 175

சோதனைமுயற்சிகளே இந்நூலின் தொடக்கமாக ஆசிரியரால் வர்ணிக்கப்பட்டுள்ளது.

பரத் நாடு தன்னிடமுள்ள ஆற்றல் மிகு தொலை நோக்காடிக் கருவியின் தொலை நோக்கி லென்சும் செய்தித்தொடர்புக்கென அனுப்பப்பட்டு வானில் நிலைப் படுத்தப்பட்டுள்ளஇன்சாட்கோளில் பொருத்தப்பட்டுள்ள லென்சும் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு அமைத்து அதன் வழியாக ஆய்வு செய்யப்பட்டது. அதன் மூலம் விரைந்துவரும் விண்கல்லின் பருமனளவு, தன்மை, வரும் கோணம்,வேகம் ஆகிய அனைத் தையும் துல்லியமாய் அறிந்த பின்னர், அதனை எங்கு எப்படி தகர்ப்பது என்பதை நிர்ணயம் செய்து விரைந்து செயல்பட்டனர். இதை யெல்லாம் பல்வேறு சம்பவங்கள்,ஆய்வு முயற்சிகளின் அடிப்படையில்,புனைகதைப் போக்கில் ஆசிரியர் சுவையாகக் சொல்லிச் செல்கிறார். இதன் மூலம் வானாராய்ச்சியின் பல் வேறு கூறுகளையும் ஏற்பட்டுள்ள வாய்ப்பு வசதிகளையும் நூணுக்க மான கருவிகளையும் வாசகர்கள் கதைப் போக்கில் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

நாடுகளுக்கிடையே அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள போட்டி களையும்அதன் விளைவுகளையும் நமக்குத் தெளிவாக உணர்த்து கிறார்ஆசிரியர்.அத்துடன்அரசியல் பொருளாதாரக் காரணங்கள் அறிவியல்வளர்ச்சிக்குக்காரணமா யமையும் தன்மைகளையும் தெளிவாக்குகிறார். அரசியல் காரணங்களால் நாட்டுக்கு நாடு கொண்டுள்ள அவ நம்பிக்கை களையும் அதற்காக வலுவோடு அமைக்கப்பட்டுள்ள உளவுத் துறைகளின் செயல்பாடுகளையும் நவீன அறிவியல் கருவிகளின் துணை கொண்டு அவர்கள் எவ்வா றெல்லாம் கூட செயல்பட இயலுகிறது என்பதையெல்லாம் கூட சுவையாக விளக்கிச் சொல்ல ஆசிரியர் தவறவில்லை.