பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


தாகச் சாதிக்க முடியும் என்பது திண்ணம்" என இந்நூலுக்குத் தக்கதொரு தோற்றுவாயை அமைத்துக் கொள்கிறார்.

அறிவியலின் தாக்கம் இலக்கியத்துள்ளும் ஊடுருவிச் செல்கிறது. இலக்கியத்தில் இடம்பெறும் கற்பனைகள் சில அறிவியல் வளர்ச்சிக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் அடி கோலுகின்றன. இவ்வாறு அறிவியலும் இலக்கியமும் ஒன்றுக்கொன்று உறுதுணையாக உள்ளன என்பதை ஆசிரியர் தாந்தே, மில்டன் போன்ற மேனாட்டு எழுத்தாளர்களது படைப்புக்களின்றும் ஏற்ற எடுத்துக்காட்டுகளைத் தந்து நிறுவியுள்ளார்.

எச்.ஜி.வெல்ஸ், பால் ஆண்டர்சன், பிராட்பரி, ராபர்ட் ஹைன்லைன், ஜூல்ஸ் வெர்ன், ஐசக் அசிமோவ், ஹோரஸ், ஹெர்வே பாசின், அலெக்சாண்டர் பியலியே, யூரிரிடால்குசின், ஹியூகோ ஜென்ஸ்பேக், இரானோ டி பெர்ஜெராக், தியூக்ரோக் ஆர்தர்சி, கிளார்க், ராபர்ட் சில்வர் பெர்க், லங்கிராப்ட், ஜான் கேம்பல் போன்ற மேனாட்டு அறிவியல் புனைகதைப் படைப்பாளர்களின் படைப்புத் திறனைச் சுட்டிக்காட்டி நம்மை ஊக்குவிக்கிறார்.

அறிவியல் அறிவும், உணர்வும் படைப்பாளிக ளுக்கும் வாசகர்களுக்கும் ஒருங்கே இருத்தல் இன்றியமை யாதது. அத்தகு படைப்பாளிகளும் வாசகர்களும் எண்ணிக் கையில் குறைவாக இருத்ததாலேயே தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம் அதிகம் தோன்றவில்லை என்பதனை ஆசிரியர் துணிந்துரைத்துள்ளார்.

பாரதியார், வைரமுத்து, ப.இராமலிங்கம், பொ.திருக் கூட சுந்தரம் பிள்ளை, சுஜாதா, மாலன், சுப்ர பாலன், ஸ்ரீதரன், டாக்டர் செம்மல், கல்வி கோபால கிருஷ்ணன், பெ.நா. அப்புசாமி, என். கே. வேலன், தி.ஜ.ரா. ரேவதி (ஹரிஹன்), மலையமான், பூவண்ணன், அழ. வள்ளியப்பா