பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

வரலாற்றுப் போக்குகளையும் கூட நம்மால் நன்குணர முடிகிறது. மேற்கூறிய இன, சமய, பொதுக் காரணங்கள்கூட அறிவியல் போக்குகளுக்குக் காரணமாய மைய வியலும்என்றுஉண்மையை இலைமறைகாயாக உணர்த்த முற்படுகிறார் ஆசிரியர் டாக்டர் செம்மல்.

ரிமோட் கன்ட்ரோல் பணியை மேற்கொண்ட பானர்ஜி எனும் பெயரில் உலவும் மோதி,எவ்வாறு சதித் திட்டம்வகுத்துச்செயல்பட்டார் என்பதை ஆசிரியர் விளக்கும் சொற்களைக்கொண்டேஅறிவோம்.

பானர்ஜி பெயரில் பொறுப்பேற்ற மோதியும், யாருமே தன்னைக் கடுகளவுகூடச் சந்தேகிக்காதபடி தன் பணியில் மும்முரமா யிருந்தார். எந்தத் திசையில் ராக்கெட்டைச் செலுத்துவது என்பதற்கான'ரிமோட்கன்ட்ரோல்' கருவி ஒருங்கிணைப்புப்பணியில் அவர் தன் கைவண்ணத்தைக் காட்டினார்.ராக்கெட்டில்அடைக்கப் பட்டுள்ள ரிமோட் கன்ட்ரோல் கருவி கீழேயுள்ளராக்கெட் தரைக் கட்டுப்பாட்டு அறையிலுள்ள 'ரிமோட்கண்டரோல்' கருவியுடன் ஒருங்கிணைந்து இயங்க வேண்டும். தரையிலுள்ள ராக்கெட் தரைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து எந்தத் திசையில் ராக்கெட் சென்று இயங்க வேண்டும் எனக் கருதி, ரிமோட் கன்டரோல் கருவியை இயக்கு கிறோமோ அதற்கேற்ப அத் திசையில் ராக்கெட் சென்று செயல்பட வேண்டும். ஆனால் பானர்ஜி பெயரில் பணியாற்றும் மோதி அமைத்த கருவி, தரைக் கன்ட்ரோல், அறையிலிருந்து வரும்'ரிமோட்கன்டரோல்'உத்தரவுகளுக்குப் பதிலாக வேறொரு ரகசிய இடத்திலிருந்து இயங்கும் ரிமோட்கன்ட்ரோல்'உத்திரவுகளுக் கேற்ப செயல்படக் கூடியதாக ரகசியமாக மாற்றியமைக்கப்பட்டு விட்டது. இதன் மூலம் சாக் நாட்டு உளவாளிக் கும்பலின் ரிமோட்கனட்ரோல் உத்திரவுகளுக்