பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180 தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

தன்னோடு அழைத்து வந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காட்டி, "இவர்தான் உண்மையான டாக்டர் பானர்ஜி. இவரைத்தான் ராக்கெட் பணியில் உங்களுக்கு உதவ அழைத்திருந்தோம். ஆனால் இவரைப் பாதிவழியில் சிலர் மடக்கி, இவரிடமிருந்த பையையும் பேட்ஜையும் பிடிங்கிக் கொண்டு, இவரை ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்து விட்டனர். இவர் எப்படியோ அங்கிருந்து தப்பி நம் அலுவலகம் வந்து சேர்ந்தார். அவர் கூறியவைகளைக் கேட்ட பின், சாக் நாட்டு உளவாளிகளில் யாரோ ஒருவன் பானர்ஜி என்ற பெயரில் இங்கே நுழைந்திருக்கலாம் எனக் கருதி மீண்டு வந்தவரோடு இங்கு ஒடோடி வந்தேன்" பானர்ஜியுடன் வந்தவர் கூறிய மாத்திரத்தில் சலாமுக்கு எல்லாமே தெளிவாகி விட்டது.

{{ }}சாக் நாட்டின் உளவாளிதான் பானர்ஜி என்ற பெயரில் ஆள் மாறாட்டம் செய்து, ராக்கெட்டில் உள்ள ரிமோட் கன்ட்ரோலுக்கான கருவியை, தளக்கட்டுப்பாட்டு நிலையத்தோடு இணைந்துச் செயல்படாமல் இருக்க ஏற்பாடு செய்ததோடு, அதைத் தங்கள் கைவசமுள்ள ரிமோட் கன்ட்ரோலுடன் ஒருங்கிணைந்துச் செயல்படுமாறு மாற்றியமைத்துள்ளார் என்பதையும் புரிந்து கொண்டதோடு பானர்ஜி பெயரில் உள்ள மோதியைப் பிடிக்கவும் ஏற்பாடாகியது.

{{ }}ராக்கெட்டிலுள்ள தானியங்கிக் கருவியை உடனடியாக மாற்றியமைப்பதன் மூலமே தரைக்கட்டுப்பாட்டு அறையிலுள்ள ரிமோட் கன்ட்ரோலுடன் ஒருங்கிணைந்து செயப்படச் செய்ய முடியும் என்ற இக்கட்டான நிலை. இதை ராக்கெட்டில் முன்பே வைக்கப்பட்டுள்ள எந்திரமனி தனாகிய ரோபோ மூலமும் செய்ய முடியாது, எனெனில், முன்பே தயாரித்துத் தரப்பட்டுள்ள உத்திரவுகளுக்கேற்ப ரோபோ இயங்கிக் செயல்பட முடியுமே தவிர, புதிதாக ஒரு