பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

182 தமிழில் அறிவியல்

              படைப்பிலக்கியம்

செல்லும் ஆசிரியர், வாசகர்களுக்கிடையே ஒருவித பரபரப்பையும் இனம்புரியாத அச்சவுணர்வையும் ஏற்படுத்தி, அடுத்து என்ன? என்ற ஆவலைத் தூண்டிவிடத் தவற வில்லை.

 எனினும், தான் செல்லும் ராக்கெட்டிலிருந்து திரும்புவதற்கு வசதியாக 'கொலம்பியா' விண்வெளி ஓடத்துடன் இணைக்கப்பட்டிருப்பது போன்ற தரை திரும்பும் விமானம் ஒன்றையும் ராக்கெட்டுடன் இணைக்க ஏற்பாடு செய்தார். அதில் தனிப்பயிற்சி பெற்றவர் சலாம் எனக் கூறுவதன் மூலம் வாசகர்கட்கு ஒருவித மன ஆறுதலையும் நம்பிக் கையையும் அளிக்கிறார் ஆசிரியர்.
 'ராக்கெட்டினுள் விரைந்து சென்ற அப்துல்சலாம் தன் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு, ரிமோட் கன்ட்ரோல் கருவியில் செய்ய வேண்டிய மாற்ற திருத்தங்களைச் செய்யலானார். சிக்கல் மிகுந்த இச்சூழ்நிலையில் அவசரமாகச் செயல்பட வேண்டியிருந்தாலும் பதற்ற மேதும் இல்லாமல் நிதானமாக, கூர்த்த மதியுடன் தன் எந்திர நுட்ப அறிவைப் பயன்படுத்திக் காரியமாற்றினார் என வர்ணிப்பதன் மூலம் சலாம் என்ற பாத்திரத்தை அற்புத செதுக்குருவாக நம் கண்முன் கொண்டு வந்து காட்டிவிடுகிறார் ஆசிரியர். அத்துடன் ஒரு அறிவியலாளன் எத்தகைய தன்மையுடையவனாக இருத்தல் வேண்டும் என்பதற்கும் கட்டியங்கூறும் காட்சியாக இஃது அமைந்துள்ளது.
 குறிப்பிட்ட நேரத்தில் ராக்கெட் சலாமுடன் மேலெழுந்து சென்ற காட்சியை அறிவியல் பூர்வமாக வர்ணித்து, அக்காட்சியில் அனைத்தையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியர்.
 ராக்கெட்டினுள் ரிமோட் கன்ட்ரோல் அறையில் செய்ய வேண்டிய சீரமைப்புப் பணியைச் செய்து முடித்துத்