பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183

முணவை முஸ்தபா 183

தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தோடு தொடர்புகொண்டு ராக்கெட் ரிமோட் கன்ட்ரோல் சீரமைப்பைச் சோதித்து, அது சரியான முறையில் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்து கொண்டார் சலாம்,

 'தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலுள்ளவர்கட்கு இஃது பெருமகிழ்வளித்த போதிலும் சலாம்மின் நிலையை எண்ணியபோது பெரும் திகிலாகவே இருந்தது. எவ்வித இடையூறும் இல்லாமல் ராக்கெட்டுடன் இணைக்கப்பட்ட விமானம் மூலம் சலாம் தரையிறங்க வேண்டும் என்பதை மனதார எண்ணி இறைவனை தியானித்து வேண்டிக்கொண் டிருந்தனர். அனைவரது கண்களும் தொலைநோக்காடி மூலம் வானத்தையே நோக்கிக் கொண்டிருந்தன என அங்குள்ள சூழ்நிலைவயச் சுட்டிக்காட்டும் ஆசிரியர் அடுத்து நிகழ்ந்தவைகளை அழகுற வாணித்துள்ளார். அவற்றை அவரது சொற்களை கொண்டே அறிவோம்.
 "உலகை நோக்கி விரைந்து வரும் எரிகல் மலையை அணுகிய அணுமின் ராக்கெட்டில் பொருத்தப்பட்டடிருந்த ஆற்றல்மிகு வெடிகுண்டுகளை முன்னரே ஏற்பாடு செய்திருந்தபடி ராக்கெட் சரமாரியாக வீசி மலைபோன்ற கல்லை சுக்கு நூறாகச் செய்த காட்சியைக் கணிப்பொறியோடு இணைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி மூலம் அறிந்தபோது அனைவரும் பலமாகக் கைதட்டி ஆராவாரித்து மகிழ்ந்தனர். தாய் நாட்டிற்கு ஏற்படவிருந்த மாபெரும் பாதிப்பை வெற்றி கொண்ட பெருமித உணர்வு அனைவருடைய முகங்களிலும் பிரதிபலித்தது. ஆனால், அது அதிகநேரம் நீடிக்கவில்லை' எனக் கூறுவதன் மூலம் வாசகர்கள் முழுக்கவனத்தை சலாமின் மீது திருப்பி, கவலை கொள்ளச் செய்து விடுகின்றார்.
 தொடர்ந்து அங்குள்ள நிலையை அவரே வர்ணிக்கிறார்: