பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185

மணவை முஸ்தபா 185

வார்த்தார். சிறிது நேரத்துக்குள் காற்றின் உராய்வால் எரிந்து அனல் பிழம்பாக ஒளி வீசும் எரிகல் சிதறல்கள் அப்துல் சலாமின் விண்வெளி ஒடத்துக்குக் குடைபிடிக்கிறதோ என எண்ணும் வகையில் அவற்றினூடே அமைதியாகத் தரையிறங்கியது. விமானத்திலிருந்து விண்வெளி உடையுடன் சலாம் இறங்கியதைக் கண்ட அனைவருடைய கண்களும் மகிழ்ச்சிப் பெருக்கால் மின்னிப் பொழிந்தன" என்று தன் வர்ணனையைத் தொடர்கிறார்.

 “எரிகல்' புதினம் ஆஸ்ட்ராய்டுகள் எனும் எரிகல்லை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டிருப்பினும் ஒரளவு அறிவியல், அரசியல், பொருளதார, சமூக, இன, மத, மொழிப்பிரச்சினை அனைத்தையும் உட்கொண்ட புதினமாகவும் அமைந்துள்ளது. தொடக்கம் முதல் இறுதிவரை அறிவியலை உள்ளீடாகவும் உயிர் மூச்சாகவும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கதையைச் சுவையாக நகர்ந்த மற்றவைகள் நொறுவல்களைப்போல ஆசிரியரால் பயன்படுத்தப்படுகின்றன. தனிமனித பலவீனங்களும் பலங்களும்கூட சிறப்பாக, இப்புதினத்தில் அலசப்படுகின் றன. நேற்றைய நிகழ்வுகள் இன்றைய பாதிப்புகளாகவும் அவை நாளைய விளைவுகளாவும் கூட தொடரவியலும் என்பதை சூசகமாக ஆசிரியர் உணர்த்தி விடுகிறார்.
 இப்புதினம் நாளைய விஞ்ஞானப் போக்குகள் எவ்வகையில் சிறப்பாக அமையலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டத் தவறவில்லை. பல்வேறு விஞ்ஞான ஆய்வுகளும் தொழில் நுட்பத்திறனுடன் ஆங்காங்கே அலசி ஆராயப் படுகின்றன. 
 இப்புதினத்தில் கதையமைப்பும் கதை செல்லும் முறையும் சிறுவர்களையும் பெரியவர்களையும் ஒரு சேரத் திருப்திபடுத்தும் வகையில் அமைந்திருப்பது பாராட்டத்தக்