பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

188 தமிழில் அறிவியல்

              படைப்பிலக்கியம்

அறிவியல் அறிவுபெற ஆற்றல்மிகு சாதனமாகப் பயன்பட வல்லது'வில்லுப்பாட்டு' என்பது தெளிவான ஒரு உண்மை.

 அறிவியல் செய்திகளை கதையம்சத்தோடு கூடிய வில்லிசைப் பாடல்கள் மூலம் நகைச்சுவையாகக் கூறுவதில் படைப்பிலக்கியக் கலைஞரான திரு. சுப்பு ஆறுமுகம் போன்றவர்கள் சோதனை முயற்சியாக மேற்கொண்டு இன்று பெரு வெற்றி பெற்று வருகிறார்கள் என்பது எண்ணி இன்புறத்தக்கதாகும்.
 அறிவியல் செய்திகளை கதை, பாட்டு வடிவில் பாமர மக்களிடையே ஏன் கொண்டு செல்ல வேண்டும்? எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை திரு.சுப்பு ஆறுமுகம் கூறுவதை, அவரது சொற்களைக் கொண்டே அறிவோம்:
 “அறிவியலைப் பற்றிய செய்திகள் யாவரும் அறிந்தி ருக்க வேண்டியது மிகவும் அவசியம். எரிசக்தியின் முழு விவரம், முழுப் பயன் தெரிந்த மக்கள் தான், அதனை மிச்சப் படுத்தாத, எதிர்கால அச்சத்தை உணர முடியும் சுற்றுப்புறத்

தூய்மையின் அவசியத்தை விஞ்ஞானம் கண்டுபிடித்துச் சொல்வது, கிராமத்தில் உள்ள குப்பனும்,சுப்பனும் தெரியாதவரை நாம் அவர்களுக்குத் தெரியப் படுத்தாதவரை சுற்றுப்புறத் தூய்மை வெறும் பேச்சளவில்தான் இருக்க முடியும் இது போலவே தான், அறிவியல் தொழில் நுட்பச் செய்திகள் மக்கள் அனைவருக்கும் தெரியாத வரையில், நிலாவாக விஞ்ஞானம் மேலே உலா வந்து கொண்டிருக்கத்தான் முடியுமே தவிர மக்கள் வாழும் வீட்டுக் குத்து விளக்காக உள்ளே வந்து ஒளி தரமுடியாது

 எங்கள் ஊர்ப்பக்கம் திருநெல்வேலியில் ஒரு நடந்த கதை சொல்வார்கள்.