பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

191



செலவின்றி தெருமுனைகளில் பகலிலோ அல்லது இரவு நேரங்களிலோ நடத்த முடியும். நல்ல கதையம்சம் கொண்ட இத்தகைய அறிவியல் புனைகதை நாடகங்களால் விளையும் அறிவியல் கருத்துப் பரப்பும் பணி வலுவானதாக அமைய வழியேற்படும். இத்தகைய நாடகங்கள் எழுத்துறுபெரு வதன் மூலம் அவை அறிவியல் படைப்பிலக்கியம் என்ற சிறப்பையும் பெறுகின்றன. இஃது இலக்கியப் பணியா கவும் அமைகிறது.

இன்றைய எழுத்தாளர்கள் மத்தியிலும் அறிவியல் அணுகுமுறையோடு கூடிய கதைகளைப் புனைய வேண்டும் என்றவேட்கை மிகுந்து கொண்டு வருகிறது. இதன் விளை வாக அறிவியல் புனைகதைகளுக்கு முக்கியத்துவம் தரும் மனப்போக்கு பத்திரிகைளிடையேயும் ஓரளவு அதிகரித்துக் கொண்டு வருகிறதென்றே கூற வேண்டும்.

அண்மைக்காலமாக 'கல்கி' போன்ற வார இதழ்கள் அறிவியல் புனைகதைகளை வெளியிடுவதில் அதிக நாட்டம் செலுத்தி வருவது ஆறுதல் அளிக்கும் செய்தி யாகும். 'கல்கி' தன் பொன்விழா ஆண்டுப் படைப்பிலக் கியப் போட்டியில் அறிவியல் புனைகதைகளுக்குப் போட்டி நடத்தி பரிசளித்தது குறிப்பிடத்தக்கதாகும். 'கல்கி' ஆசிரியர் நினைவுப் போட்டிகளிலும் அறிவியல் கதை களுக்கு இடமளிக்கப்பட்டு வருகிறது. பரிசு பெறும் அறி வியல் சிறுகதைகளும் புதினங்களும் 'கல்கி' இதழில் வெளி யிடப்படுகின்றன. இதன்மூலம் இதழ்வழி அறிவியல் புனை கதை வளர்ச்சிக்கு வலுவூட்டப்படுகிறது எனத் துணிந்து கூறலாம்.

சுருங்கக் கூறுமிடத்து அறிவியல் அடிப்படையிலான புனைகதை இலக்கியம் உருவாவது. காலத்தின் கட்டாய மாக ஆகிவருகிறது. இந்நிலையில் அறிவியல் இலக்கி