பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



யத்தை வனப்போடும் வளத்தோடும் வளர்க்கும் இனிய சூழ்நிலையை ஒளிமயமாக உருவாக்கி வளர்க்க வேண்டிய பொறுப்பு படைப்பிலக்கிய ஆசிரியர்களின் தலையாய கட மையாகும் எனக் கூற வேண்டியதில்லை.

காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப தமிழ்ச் சமுதாயம் விரைவான மாற்றத்தை எல்லா மட்டத்திலும் பெற வேண்டியுள்ளது.அதற்கேற்ப மக்களின் சிந்தனைப் போக்கிலும் போதிய அளவு மாற்றம் ஏற்படவேண்டியது தவிர்க்கமுடியாததாகும். அதற்கு உறுதுணை செய்யும் உந்து விசையாக அறிவியல் அறிவும் சிந்தனையும் அமைவியலும் என்பதில் ஐயமில்லை.

சமூக மாற்றத்திற்கேற்ப நம் வாழ்வில் இறுக்கம் பெற்ற மூடநம்பிக்கைகளும் தவறான பழக்கவழக்கங்களும் சிந்தனைகளும் விரைந்து விலக்கப் பட வேண்டும். குறிப் பாக,படிப்பறிவற்ற ஏழை,எளியமக்களிடமிருந்து விரட் டப்பட வேண்டும். இதற்கு வலுவான கருவியாக அறி வியல் உணர்வையும் அறிவியல் பார்வையையும் அவர்களி டையே உருவாக்க அறிவியல் கதையம்சம் கொண்ட நாட்டுப் பாடல்கள், ஒரங்க நாடகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இன்று வழக்கத்தில் உள்ள எழுதா இலக்கியமாகக் கருதப்படும் நாட்டுப் புறப்பாடல்களில் பலவும் அத்துறை வல்லுநர்களால் அவ்வப்போது உருவாக்கப்பட்டவைகளே யாகும். அவை ஏதேனுமொரு அம்சத்தை அல்லது சம்ப வத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டவை களாகும். அதையே இன்னும் சற்று விரிவாக சிறுகதையம் சங்களோடு கூடியவைகளாக, இசைப்பாடல் வடிவில் அறி வியுல் அடிப்படையில் உருவாக்கப்பட்டால் அவை கிராம மக்களால் உழைக்கும் வர்க்கத்தினரால் நடவுப்பாட்டு போன்ற வடிவங்களில் திறம்படப் பயன்படுத்தவியலும்.