பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா | 93

இத்தகைய நாட்டுப்புற இசைப் பாடல்கள் மூலம் கிராமங்களில் வாழும் உழைக்கும் பாமர மக்களின் சிந்தனை யோட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தஇயலும். அறிவியல் சிந்தனைகளுக்கு கலை வடிவம் தந்து அதை பாமர மக்களிடையேபரவச்செய்கின்றபோது, அஃது வலுவான சமுதாய மாற்றத்திற்கு வழியாயமைய வியலும் என்பது உறுதி.

இன்று மக்களின் வாழ்வில் தொலைக்காட்சி மிக முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. அதிலும் தனியார்தொலைக்காட்சி அமைப்புகள் விண்ணில் உலவும் செய்தித் தொடர்புச் செயற்கைக் கோள்கள் மூலம்,வளர்ச்சி பெற் றுள்ள அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பப்படும் அறிவியல் தொடர்பானஒளிபரப்பு களை இங்கு ஒளி பரப்பி வருகின்றன.அவற்றில்அதிகமான இடத்தை அறிவியல் அம்சங்களை கதைவடிவில் கொண்ட நிகழ்ச்சி களே பெரிதும் வகிக்கின்றன வெனலாம். இவற்றில் பல முன்னரே எழுதப்பட்டுநூல்வடிவில் வெளிவந்துள்ள அறிவியல் புனை கதைப் படைப்புகளாகவும், சில தொலைக்காட்சிக்கென்றே வடிவமைக்கப்பட்ட அறிவியல் புனைகதைப் படைப்புகளாகவும் உள்ளன.நூலில் விவரிக்கப்படு பவைகளாக காட்சியாகத் தருகின்றபோது, அவைகளைத் கண்ணுறுவோர் உள்ளத்தில் அவை அழுத்தமாகவே படியத் தொடங்குகின்றன. எழுத்தில் கொடுப்பதற்கும் காட்சியாக அமைப்பதற்கும் வேறுபாடு உண்டு. இன்று பல அறிவியல் புனைகதைகள் நூலுருப் பெறாது காட்சியுருப் பெற்றுச்சின்னத்திரை வழியே மக்களைச் சென்றடை கின்றன.

எனவே, சின்னத் திரைக்கேற்ப கதையம்சத்தோடு கூடிய காட்சி யமைப்புகளை உருவாக்குவதில் படைப்பாளிகள் அதிகம் கவனம் செலுத்தலாம். இத்தகைய அறிவியல்புனைகதைகளை திறம் பட்டகாட்சிகளாக அமைக்கத்தக்க