பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195


அறிவியல் புனைகதை படைப்புக்கு வழிகாட்டும் வள்ளுவர்

மக்களின், வாழ்க்கை எவ்வாறெல்லாம் சிறப்பான முறையில் அமைய வேண்டும் என வழிகாட்டிய பெரு மக்களும் தலையாயவராக விளங்குபவர் வள்ளுவப் பெருந்தகை.

குறள் குறித்துக் கூறியபோது ஒரு புலவன். எல்லாம் இதன்பால் உள' என்று கூறிய பொருண்மொழிக்கேற்ப, மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நெறிமுறை களையும் வாழ்வியலாக வகுத்தளித்த பெருமை வள்ளுவர்க் குண்டு. அக வாழ்விலும் புற வாழ்விலும் கடைப்பிடித் தொழுகத்தக்க வழிமுறைகளை நடைமுறைச் சிந்தனை யோடு கூறுயுள்ளார் என்பது வெள்ளிடைமலை

எல்லாவற்றிற்கும் நெறி வகுத்து வழிகாட்டிய வள்ளுவப் பெருமகனார் படைப்பிலக்கிய உருவாக்கத்துக்கும் செப்பமான வழியை சீராக வகுத்தளித்துள்ளார் என்பது நம்மையெல்லாம் வியப்பிலாழ்த்தும் செய்தியாகும்.

தமிழில் குறட்பா வடித்த வள்ளுவனார் எதிர்காலத் தமிழ்ப் படைப்புகள் எவ்வழியில் வீறுநடை போட வேண்டும். வளமாக வளர்ந்து, வலுவாக நடைபோடுவதன் மூலம் காலத்தை வென்று வாழும் வெற்றியைப்பெற முடியும் என்பதற்கு அற்புதமான வழியை வகுத்தளித்துள்ளார். இதைத் திறம்பட உணர்த்தும் குறட்பாவாக,

“எண்ணென்ப ஏனைய எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என அமைந்துள்ளது.

சாதாரணமாக அறிவியலானது கணக்கியலை அடித்த ளமாகக்கொண்டு அமைந்துள்ள துறையாகும். அதே