பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்


போன்று எழுத்துத் துறையாகிய படைப்பிலக்கியம் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் துறை யாகும். மேற்கூறிய குறட்பாவுக்கு “எண்ணும் எழுத்தும் வாழுகின்ற மக்களுக்கு இரு கண்களைப் போன்றது' எனப் பொருள் கூறப்படுகிறது.

எக்காலத்தும் பொருத்தும் ஏற்றமிகு கருத்துகளை உள்ளடக்கிய குறட்பாக்கள் ஒவ்வொரு காலகட்டத்தின் போக்குக்கும் தேவைக்மேற்ப பொருள் தரவல்லதாக அமைந்திருப்பது கண்கூடு. எண்ணும் எழுத்தும் மக்களின் இரு கண்களைப் போன்றது' என்ற பொருள், அறிவியல் வளர்ச்சி பெருமளவில் அமையாத காலகட்டத்திற்கு ஏற்றதாக, அன்றையச் சூழலில் சரியாக அமைந்திருக்கலாம், அப்பொருளும் பொருத்தமானதாக இருந்திருக்கலாம்.

ஆனால், அறிவியல் வளர்ச்சி உச்சத்தை நோக்கிக் சென்று கொண்டிருக்கும் இன்றையக் காலகட்டத்தில் எழுந்துள்ள புதிய சூழலுக்கேற்ப பொருள்தரவும் தயங்கவில்லை.

'கணக்கை அடிப்படையாக கொண்ட அறிவியலும் எழுத்தை அடித்தளமாகக் கொண்ட இலக்கியமும் மக்க ளுக்கு இரு கண்களைப் போன்றதாகும்' எனப் பொருள் கொள்ளும்போது, இக்காலப் போக்குக்கேற்ற பொருத்தமான குறட்பாவாக இக்குறள் அமைந்திருப்பதை அறிந்தி தின்புற முடிகிறது.

இன்னும் சற்று நூட்பமாக நுணுகிப் பார்க்கும்போது தான் வான்புகழ் வள்ளுவரின் குறட்பா தரும் வக்கமுது காலத்தையும் விஞ்சி நிற்பதோடு என்றென்றும் வழி காட்டும் ஒளி விளக்காகவும் திகழ்வது கண்டு வியந்து நிற்கிறோம்.