பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

197


'எண்ணென்ப எனக் கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவியலை முதன்மையாகக் குறிப்பிட்ட வள்ளுவர், “ஏனைய எழுத்தென்ப' எனக் குறிப்பிடுவதன் மூலம் அறிவியலுக்கு அடுத்த நிலையையே எழுத்துக்களா லான படைப்பிலக்கியத்துக்கு வழங்கியுள்ளார். அதிலும் ஒரு நுட்பத்தைப் பொறித்துள்ளார் வள்ளுவர்.

“எண்ணென்ப' என உறுதிப்பட உரைத்த வள்ளுவர் இலக்கியம் படைப்பபைக் குறிப்பிடும்போது “ஏனைய எழுத்தென்ப' எனக் கூறுவதன் மூலம் முதன்மையான முக்கியத்துவத்தை அறிவியலுக்கு வழங்கிய வள்ளுவப் பெருந்தகை எழுத்தாலாகிய இலக்கியப் படைப்புகளுக்கு இரண்டாம் மூன்றாம் இடங்களை வழங்கத் தயங்கவில்லை.

மேலும் நாம் கட்டாயம் உணர்ந்து தெளிந்து, பின் பற்றப்பட வேண்டிய ஒரு நுட்பமான கருத்தும் இக்குறட்பாவினுள் உயிரோட்டமாக அமைந்திருப்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

'எண்ணென்ப என்பதை முதலில் கூறி, அடுத்து "ஏனைய எழுத்தென்ப' எனக் கூறியதிலிருந்து அறிவி யலின் அடிப்படையிலேயே இலக்கியப் படைப்பிலக்கி யங்கள் மட்டுமே காலத்தின் தேவையை முழுமையாக நிறைவு செய்வதோடு என்றென்றைக்குமான நிலை பேற்றுத் தன்மையைப் பெற்றுக் கண்ணாகத் திகழ முடியும் என்பதையும் சூசகமாக வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

பொய்யா மொழிப் புலவராகிய வள்ளுவப் பெருந் தகை இன்றையச் சூழலில் எவ்வகையான இலக்கியப் படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என உரமாகக் கூறு யுள்ள கருத்தை அடியொற்றித் தமிழ் படைப்பிலக்கிய ஆசிரி-