பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணிந்துரை

வளர்ந்து வரும் 'அறிவியல் தமிழ்' என்னும் இளம் குழவிக்கு செய்தவத்தால் வாய்த்த செவிலித்தாயாக விளங்கு பவர் கலைமாமணி மணவை முஸ்தபா அவர்கள். அவர் 'யுனெஸ்கோ கூரியர்' என்னும் இதழின் தமிழ்ப் பதிப்பினை ஒற்றை மனிதராக நின்று கட்டிக் காத்தவர். அதற்கு உலகளாவிய அங்கீகாரத்தைத் தேடித் தந்தவர். 'தமிழால் முடியும்' என்று நாமெல்லாம் இன்று நிமிர்ந்து பேச முடிகிற தென்றால் அதற்குக் காரணம் மணவை முஸ்தபா போன்றோரின் கடும் உழைப்பேயாம்.

'தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்' என்னும் இந்நூல், எங்கள் பாரதிதாசன் பல்கழைக்கழகத்தில் அவர் ஆற்றிய இரு பேருரைகளின் தொகுப்பு. அவரது உரையைக் கேட்ட அவையோர், அன்று தம்மை மறந்து, அதில் கரைந்து கலந்து நின்ற காட்சி இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகிறது. நல்ல பேச்சு என்பது கைதட்டுப் போன்ற ஆரவாரத் தையும் எழுப்பும்; இடையிடையே ஆழ்ந்த மெளனத் தையும் தோற்றுவிக்கும் அன்றையப் பேச்சில் இரண்டையுமே மாறி மாறித் தோற்றுவித்தார்.

இயல்பான நாநலம் வாய்க்கப் பெற்ற அவர் அவை யோரை ஆட்டி வைத்ததில் வியப்பென்ன இருக்க முடியும்? அறிவியல் இலக்கியப் படைப்புகள் இதுவரை யாராலும் பேசப்படவில்லை; விளக்கப்படவில்லை; விவா திக்கப்படவில்லை, ஏன்? அறிமுக நிலையில் அமைந்த சிறு