பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199

மணவே முஸ்தப்பா

படைப்புகளுக்கும் தனிப் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க முன்வர வேண்டும்.

இன்று 'எம்.ஏ.சி. அறக்கொடை போன்ற தனியார், பொது நிறுவனங்களும் இலக்கிய அறக்கட்டளைகளும் பொது அமைப்புகளும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கி படைப்பாளர்களை ஊக்குவித்து வருகின்றன. இவைகள் கவிதை, புதினம், சிறு கதை போன்றவைகட்குப் பரிசளிப்பது போன்றே அறிவியல் புனைகதைப் படைப்புகளுக்கும் தனியே பரிசளித்துப் போற்றும் நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்.

இதுவரை வெளியிடப்படாத, சிறந்த நூல், கையெழுத்து நூல்களை அச்சிட நிதியுதவி வழங்கி அவற்றை வெளியிடத் தூண்டுவது போன்றே சிறந்த அறிவியல் புனை கதைப் படைப்பிலக்கியங்களை கையெழுத்துப்படி நிலையிலேயே தக்கவர்களைக் கொண்டு தேர்வு செய்து நிதியுதவி வழங்கி வெளியிடச் செய்யலாம்.

அவ்வப்போது வெளிவரும் அறிவியல் படைப்பிலக்கிய நூல்களை, பொது நூலகத் துறை தேர்வு செய்து, தமிழ் நாடெங்கும் உள்ள பொது நூலகங்கள் அனைத்திலும் இடம் பெறச் செய்ய வேண்டும். இதன்மூலம் வெளியீட்டாளர் களையும் அறிவியல் படைப்பாசிரியர்களையும் ஒருசேர ஊக்குவிக்க முடியும். பணம் செலவழித்து நூல் வாங்கவிய லாத வாசகர்கள் பொது நூலகம் மூலம் இத்தகைய படைப்பு களைப் படித்து, அறிவியல் நாட்டமிக்கவர்களாக மாறி வளர வாய்ப்பேற்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வெளிவரும் சிறந்த அறிவியல் படைப்பிலக்கியங்களைத் தேர்வு செய்து தமிழகம்