பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 


நூலாசிரியர்

வளர்தமிழ்ச் செல்வர்

கலைமாமணி

மணவை முஸ்தபா

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற வளர்தமிழ்ச் செல்வர், கலைமாமணி மணவை முஸ்தபா, சர்வதேசத் தமிழ்த் திங்களிதழான 'யுனெஸ்கோ கூரியர்' ஆசிரியராவார்.

காலம் தேடும் தமிழ், மருத்துவக் கலைச் சொல் களஞ்சியம், இளைஞர் இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் உட்பட முப்பது தமிழ் நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து எட்டு நூல்களையும் மலையாளத்திலிருந்து ஏழு நூல்களையும் பெயர்த்துள்ளார். எட்டு தொகுப்பு நூல்களும் வெளி வந்துள்ளன. ஐந்து சிறுவர் இலக்கியங்களையும் படைத்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். எட்டு ஆண்டுகள் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராகவும் இருந்து உள்ளார். சர்வதேச தமிழ் ஆராய்ச்சிப் பேரவையின் இந்தியக் கிளையின் இணைச் செயலாளர்.

இவரது கலை, இலக்கியப் பணியைப் பாராட்டி தமிழ் நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றம் 1986இல் கலைமாமணி விருதளித்துப் பாராட்டியது. இவரது அறிவியல் தமிழ்ப் பணியைப் போற்றி தமிழ்நாடு அரசு திரு.வி.க விருதை 1989இல் வழங்கியது. இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி ஆழ்வார்கள் ஆய்வு மையம் எம்.ஜி.ஆர். விருது வழங்கியது. இவரது அயராத தமிழ்ப் பணியைப் பாராட்டி இளையான்குடி டாக்டர் ஜாகீர் ஹுசைன் கல்லூரி அறிவியல் மன்றம் வளர் தமிழ்ச் செல்வர் விருதளித்துப் பாராட்டியது. சிந்தனையாளர் பேரவை அறிவியல் தமிழ்ச் சிற்பி பட்டம் வழங்கியது. இவர் மும்முறை உலகை வலம் வந்துள்ளார்.