பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆய்வுரை

அவர் மிகவும் கறாரான மனிதர். உண்மை, உண்மையைத் தவிர வேறு எதனையும் சுலபத்தில் ஏற்றுக் கொள்ளமாட்டார், உண்மை என்று நிரூபணம் ஆகாவிட் டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் லாஜிக்காவது இருக்க வேண்டும். அவருக்கு உடம்பு என்பது வெறும் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் அவற்றுடன் கால்சியம், பாஸ்பேட்ஸ், கொஞ்சம் இரும்பு இவற்றின் சேர்க்கை,

அந்தப் பெண்ணோ கற்பனையில் மிதப்பவள். உண்மைகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் பர வாயில்லை, மனசுக்கு இதமான கனவுகள் வேண்டும். நிலவைக் கூடப் பெண்ணாக எண்ணும் மனுஷி அவள்.

இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொண்டு அவர் களுக்குப் பிறக்கும் குழந்தை இரண்டு பேரின் அம்சங்க ளையும் கொண்டிருந்தால், அதாவது கொஞ்சம் லாஜிக், கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் கன்னத்தில் அறையும் உண்மைகள், கொஞ்சம் மனதுக்கு இதமான கனவுகள் என்றிருந்தால்?

அது தான் அறிவியல் புனைகதை

அறிவியல் புனைகதை (சயின்ஸ் ஃபிக்ஷன்) என்றால் என்ன என்பதைப் பற்றி எத்தனையோ விளக்கங்கள் சொல்லப்பட்டு விட்டன. சிறுகதைக்கு இலக்கணம் வகுத் தவர் என்று எட்கார் ஆலன்போ என்பவரைச் சொல்லு வார்கள். அறிவியல் புனைகதையின் (சுருக்கமாக அபு என்று