பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


சனை உசுப்பிவிடும் விஞ்ஞானியின் பெயர்தான் ஃபிராங் கைஸ்டின். ஆனால், இன்று ஆங்கில மொழி வழக்கில் ஃபி ராங்கைஸ்டீன் என்றாலே ராட்சசன் என்றாகி விட்டதுதான் விநோதம்)

இப்படிப் பல விநோதங்களுக்கும் ஆச்சரியங்க ளுக்கும் இடமளிப்பதுதான் அபுவின் சிறப்பு. அவை கதைகள் மட்டுமல்ல, கனவுகளோ, கற்பனைகளோ, மட்டுமல்ல, கூர்ந்து கவனித்தால் அதில் எதிர்காலத்தில் இப்படியும் நடக்கக் கூடும் என்ற தீர்க்க தரிசனம் இருக்கும். இன்று மனிதனை நகலெடுப்பது பற்றி (க்ளோனிங்) நிறை யவே பேசப்படுகிறது. பற்பல ஆண்டுகளுக்கு முன்பு தனது தீரம் மிகுந்த புது உலகம் (பிரேவ் நியூ வோர்ல்ட்) என்ற புதி னத்தில் ஹக்ஸ்லி, அதைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறார். கம்ப்யூட்டர்கள் மனிதனைப்போல நடப்பதாக அபு எழுத்தாளர்கள் கற்பனைச் செய்ததுண்டு. இன்று ரோபோக்கள் வந்து விட்டன. கம்ப்யூட்டர்கள் யோசிப்பதாக அபு எழுத்தாளர்கள் சிந்தித்ததுண்டு. இன்று செயற்கை அறிவாற்றல் பற்றி ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால் அபுக்கள் எதிர் வரும் உலகத் திற்கு இட்டுச் செல்லும் தலைவாசல். அவற்றைப் படிப்பதால் பொழுது ஒரு போதும் வீணாவதில்லை. சிந்தனை கூர்மை பெறும்; கற்பனை வளம் சிறக்கும்.

சரி, அப்படியானால் தமிழில் அபுக்கள் உண்டா? அவை எப்படி இருக்கின்றன? அண்மைக் காலமாக இந்திய மொழிகளில் பல வற்றில் குறிப்பாக மராத்தியில் உலகத் தரத்திற்கு அபுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன, இயற்பியல் விஞ்ஞானி டாக்டர் ஜெயந்த் வி. நார்லிக்கர் எழுதியிருக்கும் 'பணியுகம் வருகிறது' என்ற சிறுகதை இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.