பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

29


அப்போது கண்டயறிப்பட்டிருந்த நிலவு பற்றிய அறிவியல் உண்மைகள்.

இந்த அறிவியல் செய்திகளின் அடிப்படையில் நிலவையும் வானையும் அதில் மின்னிப் பொழியும் (நட்சத்திர) மீன்களையும் பற்றி முனைப்புடன் சிந்திக்க முற்படுகிறார் பாரதி, வானை அளந்து மீனை ஆய முனைந்த பாரதி, ஆழங்காண முடியாத கடலையும் அதில் வாழும் மீனினங்களையும் அறியத் துடிக்கிறார், அத்துடிப்பின் வெளிப்பாடாக,

"வானையளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்"

எனச் சங்கநாதமிடுவதன் மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகளின் துணையோடு சந்திரமண்டலம் சென்று நேரிடையாக ஆய்வு செய்ய அழைப்பு விடுகிறார்.

பாரதி பாடிய காலத்தில் சந்திரமண்டலம் செல்ல மனிதனால் முடியும் என்ற நம்பிக்கைகூட முளைவிடாத காலம். ஆயினும் வளர்ந்து வரும் விஞ்ஞானம் அதற்கு வாய்ப்புவசதிகளை மனிதனுக்கு விரைந்து உருவாக்கித் தரும் என்ற அறிவியல் உணர்வும் நம்பிக்கையும் அவர் உள்ளத்தில் அழுத்தம் பெற்றதால் அஃது அறிவியல் கண்ணோட்டப் பாடலாக வெளிவருகிறது.

அவரது அறிவியல் கண்ணோட்டம் பொய்யாகவில்லை. அறிவியல் வளர்ச்சி புதியன புனையும் போக்கில் சந்திர மண்டலம் சென்று திரும்ப முடியும் என்ற நம்பிக்கையில் செயற்கைக் கோள்களை உருவாக்கி நிலவைச் சுற்றி வரச் செய்தது. அவற்றின் துணை கொண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்ந்தறிந்த அறிவியல் ஆய்வுலகம் செயற்கை விண்கோள் மூலம் நிலவு சென்று வர முனைப்புக் காட்டி யது. விரைவிலேயே செயற்கை விண்கோள் மூலம் நிலா