பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



உள்ளது. காரணம், தாங்கள் பள்ளி, கல்லூரிகளில் பெறு கின்ற அறிவியல் அறிவை ஏட்டுக் கல்வியாகக் கருதி ஒழுகுவதேயாகும். அந்த அறிவியல் கல்வியின் அடிப்படையில் சிந்திக்க முயல்வதோ, அதன் அடிப்படையிலான மனப் பான்மையுடன் வாழ முற்படுவதோ இல்லை. தாங்கள் பெற்றுள்ள அறிவியல் கல்விக்கும் தாங்கள் பேணி வாழும் வாழ்க்கைப் போக்குக்குமிடையேயுள்ள அகன்ற இடைவெளியைக் குறுக்க எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாததே யாகும்.

விண்ணில் சூரிய கிரகணமோ அல்லது சந்திர கிரக ணமோ ஏற்படும்போது அதற்கான அறிவியல் காரணங்கள் மிக நன்றாக தெரிந்த போதிலும், அக் கல்வியறிவு பெற்றவர், தான் பெற்ற அறிவியல் கல்விக்குப் புறம்பான, இன்னும் சொல்லப் போனால் மாறுபாடான ஐதீகச் சடங்குகளை கிரகணத்தன்று நிறைவேற்றுவதில் பேரார்வம் காட்டு வதில் சிறிதும் பின்னடைவதில்லை.

அறிவியல் கல்வி கற்றவர்களின் நிலையே இது வென்றால், படிக்காதவர்களைப் பற்றிக் கூற வேண்டியதே இல்லை.

நாளுக்கு நாள் நம் வாழ்வில் அறிவியல் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழ்நிலையில், அறிவியல் அறிவும் அறிவியல் மனப்பான்மையும் அதிகரிக்க வேண்டு வது அவசியம் எனக் கூற வேண்டியதில்லை. இதில் அறி வியல் கல்வி பெற்றவராயினும் அல்லது வேறு துறைக் கல்வி பெற்றவராயினும் அனைத்துப் படிப்பாளிகளுமே அறிவியல் மனப்பான்மையாளர்களாக உருமாறுவதும், அதற்கான சூழலை உருவாக்குவதும் காலத்தின் போக்குக்கு அவசியமான இன்றியமையாத் தேவையாகும் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது.