பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்


களையும் வாழ்க்கை நெறி முறைகளையும் இலக்கியங்கள் முழுமையாகப் பிரதிபலிக்கத் தவறவில்லை. சங்க காலத் தமிழனின் வாழ்க்கை முறையானது. சமூகச் சிந்தனையின் அடிப்படையிலானது என்பதை அறிந்துணர முடிகிறது. சம யத் தாக்கம் அதிகமின்மையினால் சமுதாயத்தை உள்ளது உள்ளவாறே அணுகும் போக்கு மிகுந்திருப்பதை சங்க இலக் கியங்கள் அதிகக் கற்பனைக் கலப்பின்றி நம்மால் நன்கு அறிந்து கொள்ள இயல்கின்றது.

அது மட்டுமல்ல, அவனது சமுதாயப் பார்வை அறி வியல் அடிப்படையிலானதாகவும் அமைந்திருந்ததை நம் மால் புரிந்துகொள்ள முடிகிறது. சமயச் சிந்தனை குறைவா கவும் சமுதாய விழிப்புணர்வு மிகுந்தும் இருந்த அவனது வாழ்க்கைப் போக்கின் இரு கண்களாகக் காதலும் வீரமும் அமைந்திருந்தது. இலக்கியத்தை மட்டும் அகம்புறம் எனப் பார்ப்பதோடு அமையாது. அவனது முழுவாழ்க்கையும் வீரத்தையும் காதலையுமே அடியொற்றியிருந்தது. திரைகட லோடி திரவியம் தேடுவது அவனது பொருளியல் நோக்காக இருந்தது. இதற்கு தரைவழிசென்று அண்டை நாடுகளோடு வாணிகம் செய்வதோடமையாது கடல் கடந்து கப்பல் மூலம் வாணிகம் செய்வதும் அவனது வாழ்வியல் முறை யாக அமைந்திருந்தது. மேற்கே மத்தியதரைக்கடல் நாடு களும் கிழக்கே கம்போடியாவும் மேற்கே சீனாவும் அவனது வாணிக எல்லைகளாக அமைந்திருந்ததை பல்வேறு சான்று கள் இன்றும் பறைசாற்றிக் கொண்டுள்ளன. தமிழ் இலக்கிய அகச் சான்றுகளும் அவ்வந்நாடுகளில் அமைந்துள்ள பல் வேறு புறச்சான்றுகளும் வரலாற்றுப் பூர்வமாக இதை மெய் பித்துக் கொண்டுள்ளன. வானவியல், கப்பலியல், கடலியல், மருத்துவவியல் போன்றவற்றில் தமிழன் தனித் திறன் பெற்றிருந்தான்.