பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



சமயத்தை விஞ்சிய அறிவியல் தாக்கம்

தொழிற் புரட்சிக்குப்பின் மேனாட்டாரின் சமூக வாழ்வில் அறிவியல் மிக அதிகம் அழுத்தம் பெறுவதா யிற்று. இங்கோ அதே காலகட்டத்தில் சமயம் அதிக அழுத் தத்தோடு விளங்கும் நிலை. மேலும், சமயச் சிந்தனைக்கு ஒரு வகையில் எதிரிடையான போக்குடைய அறிவியல் சிந்தனை, சமயத்தை விஞ்சியதாக உருவாகி வலுப்பெற இயலாமற் போனதென்னவோ உண்மை. எனினும் காலப் போக்கின் விளைவால் அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந் துள்ள அறிவியலின் தாக்கத்தால் அறிவியல் இலக்கியப் படைப்புகள் பெருமளவில் உருவாக வேண்டியது. இன்றைய காலப் போக்கின் கட்டாயமாகியுள்ளது. எனவே அதைப்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும் தவிர்க்க முடியாததொன்றாகும்.


அறிவியலும் கலைகளும்

மாறும் இயல்பு கொண்ட மனித வாழ்க்கைக்கு என்றும் மாறா உண்மைகளைக் கண்டறிந்து கூறும் கடுமை யான முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபடுபவன் இலக்கியப் படைப்பாளன். தான் கண்டுணரும் வாழ்வியல் உண்மை களை கதைப் போக்கில் பாத்திரங்களின் செயல்பாடுகள் வழியே உணர்த்த விழைகிறான். இதற்கு அவன் சமயத் தத்து வங்களைத் துணைக்கழைக்கவும் தவறுவதில்லை. கல்லி லே கலை வண்ணம் காணும் சிற்பியும் தூரிகையில் அழகோ வியம் வரையும் ஓவியனும்கூட இதே போக்குடையவர்கள் தான்.

படைப்புக் கலைஞர்களாகிய இவர்கள் அனை வருமே வெவ்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி, தத்தமது தனிப்போக்கில், தத்தமக்கேயுரிய உத்திகளைக் கையாண்டு