பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

39


படைப்புகளை உருவாக்கி ஆழிய உண்மைகளை அதற்கான உணர்வுகளை வெளிப்படுத்துவதையே தங்கள் உயிர் மூச் சாகக் கொண்டு செயல்படுகின்றனர். இவ்வாறு உண்மை யைத் தேடிக் கண்டறிய முயலும் கலைகளைப் போன்றே அறிவியலும் அதற்கான வழியாக அமைந்துள்ளது எனத் துணிந்து கூறலாம்.

மனித உள்ளத்திற்கும் உலகத்துக்கும் உள்ள ஆழ்ந்த உறவை வலுவாகப் புலப்படுத்துவதில் எந்தக் கலைக்கும் பின்னடைந்ததில்லை அறிவியல். எனவே, அறிஞர்கள் 'அறி வியற்கலை' என்றே இதனை அழைக்கின்றனர்.

இதைப்பற்றி சற்ற ஆழச் சிந்திப்போமானால் இதில் பல உண்மைகள் அடங்கியிருப்பதை நம்மால் உணர முடியும்.

மனிதன் ஆய்வறிவால் உருவாகும் அறிவியல் கண்டு பிடிப்புகள் புதிய புனைவுகள் மனிதத் தேவைகளுக்கேற்பப் பயன்பட்டு அவன் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் வளமூட்டுகி றது. இவ்வாறு அறிவாதாரமாக அமையும் அறிவியல் உண்மைகளோடு, புனைவுகளோடு தங்கள் உணர்வுகளைக் குழைத்து, இலக்கிய, கலைப்படைப்பாக உருவாக்கும் போது, அவை மனிதன் குருதியும் எலும்புமாக உருமாறிய மைந்து, கலையுணர்வையும் அறிவாற்றலையும் அளவோடு தந்து, அவன் மேம்பாட்டுக்கு மேலும் வலுவூட்டுகிறது. இவ்வுணர்வுகளையே ஜேகப் புரானோவ்ஸ்கி போன்ற படைப்பிலக்கிய மேதைகளும் ஷெல்லி போன்ற கவிஞர் களும் திறம்படப் புலப்படுத்திச் சென்றுள்ளனர்.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும்மென்றால் பயன்மிகு இலக்கியமாக திறம்பட்ட படைப்பாக இலக் கியம் அமைய வேண்டுமென்றால் அஃது அறிவியல் உட்படவாழ்வின் அனைத்து அம்சங்களையும் உட்கொண்ட