பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்


தாக அமைய வேண்டுவது அவசியம் ஆகும். காலத்தை விஞ்சி நிற்கும் இலக்கியங்கள் உருவாக இதுவே அடித்தள மாகும். இப்போக்கில் எழுந்த இலக்கியங்களே இன்றும் வாழும் பெற்றியினையுடையதாக விளங்குகின்றன என்பது இலக்கிய வரலாறு தரும் உண்மையாகும்.


அறிவியல் போற்றிய ஆங்கிலக் கவிஞர்கள்

இன்றைய உலகின் மிகப் பெரும் படைப்பிலக்கிய ஆசிரியர்களாக, கவிஞர்களாக உலகினரால் பெரிதும் போற்றப்படும் மறுமலர்ச்சிப் படைப்பாளர்கள் தாந்தேயும் மில்டனும். இவ்விரு படைப்புக் கவிஞர்களும் வானவியல் துறையில் பேரார்வமிக்கவர்களாக விளங்கினர். வானவியல் குறித்த பல செய்திகளைத் தங்கள் படைப்புகளினூடே கூறி யவர்கள்.

வானவியல் ஆய்வின் திருப்பு முனையாக அமைந்தது தொலைநோக்காடியின் கண்டுபிடிப்பு. கலீலியோவால் கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கிக் கருவி வானவியல் ஆய்வின் ஆற்றல்மிகு வேக முடுக்கியாக அமைந்ததொன் றாகும். இக்கருவியால் பெரிதும் கவரப்பட்டவர் மில்டன். தன் கவிதைப் படைப்பில் "கிருஸ்துவுக்குச் சாத்தான் இவ்வு லகைப் புறக்கண்ணால் அன்றி தொலைநோக்குப் பார்வை யுடன் காட்டினான்" எனக் கூறுவதன் மூலம் தொலைநோக் காடியின் பயன்பாட்டை எடுத்துக்கூறி விளக்க முனைகிறார்.

ஆங்கில மொழியில் மிகச் சிறந்த படைப்பாகப் போற்றப்படுவது மில்டனின் "இழந்த சொர்க்கம்" (paradise lost) என்ற கவிதை இலக்கியப் படைப்பாகும். இதில் அண்டார்டிக்கா பற்றி, அங்குள்ள சூழல் அமைப்பு பற்றி.

"இந்த வெள்ளப் பெருக்குக்கு அப்பால் பனியால் உறைந்த கண்டம் ஒன்று இருளில் ஆழ்ந்து கிடக்கின்றது.