பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

43


அப்படைப்புகளின் பல்வேறு நிலைகளையும் படம் பிடித்துக் காட்டவல்லனவாகும்.

இதன் மூலம் பழங்காலக் கலைப் படைப்புகளைக் கலைஞன் எவ்வாறெல்லாம் அமைத்துள்ளான்? அவன் பணியாற்ற எடுத்துக்கொண்ட கால இடைவெளி எவ்வளவு ? என்பன போன்ற தகவல்களை யெல்லாம் கதிர்கள் மூலம் பெறமுடிகிறது.

மேலும், 'எக்ஸ்-ரே எனப்படும் ஊடுகதிர் மூலமும் ஒளிப்பிரிகை போன்றவற்றின் வாயிலாகவும் கலைப்பொருட்கள் அனைத்தின் எல்லாத் தகவல்களையும் துல்லியமாகக் கணித்தறிய இயல்கின்றது.

அறிவியலின் விரைவான வளர்ச்சியின் விளைவாக, கலைப் பொருட்களின் காலத்தைத் துல்லியமாகக் கண்டறிய "கார்பன்-14" எனும் முறை மிகச் சிறப்பாகப் பயன்பட்டு வருகிறது. அதேபோல் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை எலும்புகளின் மூலம் கண்டறிய 'அமினோ அமில' முறை ஆய்வு மிகச் சிறப்பாகப் பயன் பட்டு வருகிறது.

அறிவியலானது கலைக்கோ இலக்கியத்திற்கோ முரண்பட்ட ஒன்றாக இல்லாது அவற்றை வளர்த்து, காக்கும் ஒன்றாகவே விளங்கி வருகிறது என்பதை உலகம் இன்று உணர்ந்து வருகிறது. இவை சமுதாய வளர்ச்சியின் இரு கண்களாக அமைந்துள்ளன என்றே கூற வேண்டும். இதே உணர்வை வேறொரு கோணத்தில் உணர்த்த விழைந்த ஃபிரெஞ்சு மொழிப படைப்பிலக்கிய பேராசான் விக்டர் ஹ்யூகோ “நான் கலை; நாமெல்லாம் அறிவியல்" என அழகுபடக் கூறினார்.

ஆதி மனிதன் முதல் - தொடரும் அறிவியல்

கலையுணர்வைப் போன்றே அறிவியல் உணர்வும் அறிவும் பழமையுடையதாகும். இன்னும் சொல்லப்