பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

உண்மையைப் பொய்யானதாக்கி விடுகிறது. சான்றாக, தொடக்க கால அறிவியல் ஆய்வின் அடிப்படையில் பிலோஜிங்ஸ்டன் என்பதை ஒருவகைத் தனிமம் என்று கருதினர். பளபளப்பான அஃது உலோகங்களுக்கு ஒரு மினுமினுப்பும் பளபளப்பும் தரவும் கெட்டித்தன்மை ஏற்படுத்தவும் இத்தனிமம் பயன்படும் எனக் கருதப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் ஆக்சிகரணக் கொள்கைக்கு உட்படாத ஒன்று எனவும் எண்ணப்பட்டது. ஆனால்,அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வின் விளைவாக அஃது தனியான ஒரு தனிமம் அன்று; எரிபொருள் மட்டுமே என்ற கருத்து தலைதூக்கி நிலைபெற்றது. முன்பு தனிமமாகக் கருதப்பட்ட ஒன்று, அது எரிபொருள் எரியாற்றல் மட்டுமே என்ற அளவில் அமைந்தது.

{{ }}இவ்வாறு அறிவியல் கண்டுபிடிப்பானது எவ்வளவு தான் உயர்ந்ததாக, சிறந்ததாக அமைந்திருத்த போதிலும் தொடர் ஆய்வின் விளைவாக புதிய உண்மை, தத்துவம் தலைதூக்குகிறபோது முந்தையத் தத்துவமும் மறைந்து விடுகின்றது. அதைப் பற்றிய கருத்துக்களும் தானாக விடை பெற்றுக் கொண்டு ஒதுங்கி விடுகின்றன. புதிய அறிவியல் உண்மை அரசோச்ச முனைந்து விடுகிறது. இன்றைய உண்மை நாளைய பொய்யாகவும், நாளை மறுநாள் அது பொய்யாகவும் ஆவதுதான் அறிவியலின் வளர்ச்சி வரலாறு எனக் கூறினும் பொருந்தும்.

அனுமானமும் அறிவியலும்

{{ }}ஒவ்வொருவரும் தான் வாழும் வாழ்க்கைப் போக்கை அடியொற்றி, இதனினும் மேலானதொரு வாழ்க்கையை அனுமானம் செய்வது இயல்பு, இஃது மனிதனுக்குரிய தனித்தன்மையாகும். ஒவ்வொருவர் உள்ளமும் அவ்வப்போது அசைபோடும் அனுமான வாழ்வு, அவரவர் அறிவுத்