பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தமிழ் அறிவியல் படைப்பிலக்கியம்

நாம் உண்மை என நம்பி ஏற்பதில்லை. ஏனெனில், அக்கற் பனை கலந்த அறிவியல் கதையில் விவரிக்கப்படும் பல செய்திகள் உண்மையின்பாற் பட்டவைகள் அன்று என்பது நமக்கு நன்கு தெரிந்திருப்பதே யாகும்.

எனினும், இன்று விரைந்து வளர்ந்து வரும் அறிவியல் துறைகளின் வளர்ச்சிப் போக்கும் அதைத் திறம்பட உணர்த்த விழையும் செய்திகளும் அறிவியல் சார்ந்த உண்மை எது, கற்பனை எது என்பதைப் பிரித்தறிய இயலா வண்ணம் ஒருவிதத் தடுமாற்றம் ஏற்படுவது தவிர்க்க இயலாத தொன்றாக ஆகி வருகிறது.சான்றாக 'ரபோ' (Robot)என்று அழைக்கப்படும் எந்திர மனிதக்கருவி தொடர்பான தொழில் நுட்பம் இன்று வெகுவாக வளர்ந்துள்ளது.

கணினி,தன்னுள் செலுத்துப்படும் கட்டளைகளுக் கேற்ப இம்மியும் பிசகாத முறையில் தன் பணிகளைச் செவ்வனே செய்து முடிக்கிறது.அத்துடன் தானாகவே சில கணிப்புகளைச் செய்து தன்னிச்சையாகச் செயல்படும் அதாவது சிந்திக்கும் எந்திர மனிதனின் செயல்பாடுகளைச் சிறிது கற்பனை கலந்து கதை மூலம் விவரிக்கும்போது, அதன் இன்றைய வளர்ச்சியின் அடிப்படையில் அதன் ஒட்டு மொத்த செயல்பாடுகளையும் உண்மை என்றே படிப்போர் நம்ப நேர்கிறது. அதே போன்று விண்ணுலகப் பயணங்களைப் பற்றிய அறிவியல் புனை கதைகளைப் படிக்கும் போது அதன் அடிப்படையான சில அறிவியல் செய்திகளைத் தவிர மற்றவற்றை நாம் கற்பனை என்று கருதுவதுண்டு. ஆனால், இன்றுவிண்கோள்களில் நம்மைப் போல் பல்வேறு வடிவினவாக உயிரினங்கள் இருப்பதாகவும் அவைகள்அறிவியல் வளர்ச்சியில் நம்மைவிடப் பல மடங்கு சிறந்து 'விளங்குவதாகவும்', அவை அடிக்கடி'பறக்கும் தட்டு'கள் மூலம் நம் நிலவுலகிற்கு வந்து செல்வ