பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

49



தாக சின்ன, பெரிய திரைகளில், திரைப்படங்களாக அவ்வப்போது காட்டப்படுவதால் அவற்றைக் கண்ணுறும், ஒவ்வொருவரும் 'விண்வெளி உயிரினங்கள்' உண்மையானவை என நம்ப நேர்கிறது.இஃது ஏற்புடையதல்ல,

எனவே, அறிவியலுக்கும் கற்பனைக்குமிடையே யுள்ள வேறுபாட்டை அறிவதற்கு அறிவியல் உண்மைகளைஉள்ளது உள்ளவாறே உணர்த்துவது மிகமிக முக்கியமானதாகும்.


வியப்புண்டு - முனைப்பில்லை

சாதாரணமாகவே விந்தைமிகு அறிவியலில் பெரு வளர்ச்சி நம்மை வியக்கச் செய்வது இயல்பே.

அறிவியல் துறைகளில் அவ்வப்போது வெளிப்படும் அறிவியல் கண்டுபிடிப்புச் செய்திகளைச் செவிமடுக்கும் போதுநமக்கு வியப்பும் திகைப்பும் ஏற்படுகிறது.அறிவியல் விளைவித்து வரும் அருஞ் சாதனைகளை வானளாவப் புகழ்கிறோம். வியந்து போற்றி மகிழ்கிறோம். மனித குல வளர்ச்சிக்குக் கிட்டிய மகத்தான புது வரவாகக் கருதிக் களிக் கிறோம். ஆனால், அதே சமயத்தில்அதன் நுணுக்கங்களை அறிந்து புரிந்து கொள்ள நம் உள்ளம் அவாவுவது இல்லை. அத்தகைய முயற்சிகளில் நாம் முனைப்புக் காட்ட முற்படுவ துமில்லை. மனித மூளையில் வெற்றிப் பெருமிதத்தை எண்ணி வியக்கும் நாம் அம்மூளையின் துணைகொண்டு, தம் அறிவியல் அறிவைப் பெருக்கிக் கொள்ள விழைவதில்லை. இன்னும் சொல்லப் போனால் இஃது நம்மால் இயலாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொள் கிறோம்.

போற்றத் தெரியும் - வளர்க்கத் தெரியாது

நாளும் வளர்ந்துவரும் அறிவியல் துறையின் விரைவான வளர்ச்சி மக்களின் கவனத்தைப் பெருமளவில்