பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

51



இம்மூவகையினரும் அறிவியல் வளர்ச்சிகளை வெவ்வேறு கோணங்களில் மேற்போக்காகக் கண்டு கருத் துரைப்பவர்களாக இருப்பது கண்கூடு.

முதல் வகையினர் ஒட்டு மொத்தமாக அறிவியல் வளர்ச்சியைப் போற்றிப் புகழ்வதோடு அமைதியடைகின்ற வர்கள். அறிவியல் நுட்பம் அறிய விழைவதில்லை.

இரண்டாம் தரப்பினர், அறிவியல் முன்னேற்றத்தால் கிட்டும் பயன்கள் பற்றிப் பாராட்டுவதோடும் அவற்றைத் துய்த்து மகிழ்வதோடும் சரி, அப்பயன்களுக்கு அடிப்படைக் காரணமான அறிவியல் தொழில் நுட்பத் திறனை அறிந்து கொள்வதில் ஆர்வப்படுவதில்லை.

மூன்றாவது வகையினர்க்கோ அறிவியல் விந்தை களால் ஏற்படும் வியப்பும் திகைப்பும் அச்சவுணர்வாக மாறி அவநம்பிக்கையாக வடிவெடுத்து விடுகிறது. இவர்கள் தம் அச்சத்தைப் போக்கி அவநம்பிக்கையை விலக்க, அவர்கள் எளிதாக அறிவியல் உண்மைகளை அறிந்துணர்ந்து தெளியும் வகையில் எடுத்துகு சொல்ல வேண்டாமோ?

மேற்கூறிய மூவகைகளும் அறிவியல் உண்மைகளை நுட்பங்களை ஒரளவேனும் அறிந்துணர வாய்ப்பேற்படுத்து வது அவசியமன்றோ?

போதிய அறிவியல் அறிவு பெறாத இத்தகையவர் கட்கு அறிவியல் அறிவை, அதன் திட்ப நுட்பத்தை அவர் கட்குப் புரியும் விதத்தில் எடுத்துக் கூறி விளக்க வேண்டுவது அறிவியல் எழுத்தாளர்களின், குறிப்பாக அறிவியல் புனை கதை எழுத்தாளர்களின் இன்றியமையாக் கடப்பாடாகும்.

இத்தகையவர்கட்கு ஏற்ற முறையில் அறிவியன்ல எழுதுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அறி வியல் உண்மை என்பது அலங்கார ஆடை, அணி இல்லாத