பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



அப்பட்டமான உண்மைகளாகும், அவைகளைச் சுவைபட விளக்க வேண்டி, கற்பனை கலந்து படைப்பிலக்கியம் வழியே கூறம்போது அறிவியல் உண்மைகள் ஊறுபடாதா? என எழும் கேள்வியை நாம் முற்றாக விலக்கி விட முடி யாது. அறிவியல் உண்மைகள் ஊறுபடா வண்ணம் அறி வியல் படைப்பிலக்கியம் படைத்தளிப்பது ஆசிரியரின் கடப்பாடாகும். இதனை உணர்ந்து தெளிய இலக்கிய வர லாற்றுப் போக்கை அறிவது அவசியம்.


காலப் போக்கை எதிரொலிக்கும் படைப்பிலக்கியங்கள்

எந்தவொரு படைப்பிலக்கியமும் காலத்தின் போக்கை அடியொற்றியே உருவாக்கப்படும். அதுவே வலுவான அடித்தளத்தில் உருவான படைப்பாக அமைய முடியும்.

உரைநடை வளர்ச்சியை யொட்டியே சிறுகதை இலக் கியல்களும் நெடுங்கதை இலக்கியங்களும் படைக்கப்பட லாயின. அதற்காக சிறுகதையோ பெருங்கதையோ தமிழில் இல்லை என்று பொருளல்ல.

சங்க இலக்கியங்களில் பல சம்பவங்கள் சிறுகதைக் கான கருவோடு அமைந்துள்ளன. அவ்வாறே காப்பியங்கள் அனைத்தும் பெருங்கதைப் படைப்புகளே யாகும். இவை செய்யுள் வடிவின என்பதைத் தவிர வேறு மாறுபாடு இல்லை. இவைகளும் காலத்தின் போக்கைப் பிரதிபலிக்கத் தவறவில்லை.

இன்னும் சொல்லப் போனால் தாத்தா, பாட்டி மூலம் எழுதாக் கதைகளாகப் பல சிறுகதைகளும் நெடுங்கதை களும் காலங்காலமாக வாய் மொழி வாயிலாக, எழுதாக் கதைகளாக பேரப்பிள்ளைகள் மூலம் வழங்கப்பட்டு வரு கின்றன என்பதை யார்தான் மறுக்க முடியும். இன்றையக் காலச் சூழலில் நகரங்களில் வேண்டுமானால் அத்தகைய